Sunday, April 18, 2010

THE RISE OF THE BANNER







அன்றைக்கு COMSEM.அதுக்கு பேனர் அடிக்கிறதுக்கு  சோலைராஜா,
சந்தோஷ் & CO("A" batch and "C" batch), பொறுப்பேற்று செஞ்சுகிட்டிருந்தாங்க.பேனர் வந்து சேர்ந்த போது மணி கிட்டத்தட்ட  அதிகாலை 3க்கு மேல ஆயிடுச்சு.IT மூனு பேட்ச்சும் சேர்ந்துதான் பேனர் அடிச்சாங்க.ஆனா அதுல அதிகமா இருந்தது B-Batch பசங்க.
எப்படியோ கஷ்டப்பட்டு அந்த ரீப்பர் கட்டைல,பேனர அடிச்சதே பெரிய விஷயம்.அத நிறுத்தும் போது கிட்டத்தட்ட 7 மணி ஆயிடிச்சு.எங்க விழுந்திடுமோனு பயந்துட்டு,அதுவும் இல்லாமல் HOD வாக்கிங் வரதுக்குள்ள அத நிக்க வச்சுடணும்னு கஷ்டப்பட்டு
செஞ்சாங்க.எப்படியோ வச்சுடோம்,சொல்லி வச்ச மாதிரி அடுத்த நிமிஷம் HOD
அங்க வந்துட்டார்.வழக்கமா ஓடுற மாதிரி ஓடிடுவாங்கலோனு பாத்தா,நல்ல வேளை எல்லோரும் ஓடாம நின்னுட்டு இருந்தாங்க.
   "எவன்டா பேனர் வைக்க பெர்மிஷன் கொடுத்தது"
   "எவன கேட்டு லுங்கிய மடிச்சு கட்டியிருக்க"-HOD
 நாகாவ கூப்பிட்டு எதோ கேட்டார்.

கத்திகிட்டு பசங்கெல்லாம் ஹாஸ்டல் கிளம்பிட்டாங்க.
கொஞ்ச நேரத்துல ஹாஸ்டலுக்கு,4 ஸ்டாப்ஸ் வந்துட்டாங்க.எவனும்
கண்டுக்கலயாம்.திரும்பவும் போய் பாக்கும்போது அங்க பேனர் இல்ல.
'c" பேட்ச் பசங்கள வச்சு கிழிச்சி,கொண்டுபோய்டாங்க.

"எங்களுக்கே பாடம் சொல்லிதரீங்களா,என்ன பண்றோம் பாருங்க."
   "you teach us the rules and we we will teach you how
   to break it."
    அதுல இருந்த இந்த இரண்டு வரியை தான் காரணாம சொல்றாங்க.
"சொல்லி இருந்தா நாங்களே வைட்னர் இல்லாட்டி செல்லோடேப் வச்சு
மறச்சிருப்போமே,அதுக்குள கிழிச்சிடாங்களேனு பசங்க ஒரு பக்கம்."

"வச்சதும் வச்சீங்க,ஒரு நல்ல wordings போட தெரியல.நல்ல  பேனரா இருந்திருந்தா நாங்களே permission கொடுத்திருப்போமே!". -KSK


அத கேக்க போகும் போது,டீன் வந்து,
             "நம்ம Department function நீங்க
             தான் செய்யணும்,கிழிச்சதுக்காக comsemம நிறுத்திடுவோமா,சொல்லுங்க
             வந்திருக்கிற கெஸ்ட் எனக்கு நல்லா தெரிஞ்சவர்,இது போல பிரச்சனனு சொன்னா போய்டுவார்.ஆனா உங்களால  நின்னுடுச்சுனு....."

அப்புறம் incharge,HODனு பேசி ஒரு வழியா அந்த வரிய மட்டும் மறைச்சு
திரும்பவும் அத நிக்க வைக்கணும்னு,கிழிஞ்ச பேனர வாங்கி,ஒட்டி
திரும்பவும் பேனர ஏத்தும் போது மணி 1, கிட்டதட்ட.
அந்த பேனர திரும்பவும் நிக்க வச்ச போது வந்துச்சு பாருங்க சத்தம்..
அதுக்காக தான் இத்தனையும்.....

என்ன இருந்தாலும் அதுல இருந்த அந்த ரெண்டு வரிகள யாரும் ஏத்துக்க மாட்டாங்க.தப்புதான்.

இந்த கலவரத்துல,ஸ்ரீராம் பண்ண paper presentationன பாக்க
முடியாம போய்டுச்சு.
























































































Friday, April 16, 2010

BATCH DAY

நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு அதுவரைக்கும்.அன்னைக்கு BATCHDAY,
வழக்கமா செய்றமாதிரிதான், கேக் வெட்டி,கிளாஸ decorate பண்ணி,பேன்ல
பொடிய கொட்டி பேட்ச்டேவுக்கு எடுத்த uniformம போட்டுக்கிட்டு ரகள
பண்ணிக்கிட்டு,கத்திகிட்டு வாத்தியாருக்கு மாலை போட தயாரான போது...
"ரௌண்ட்ஸ் வந்துகிட்டு இருகாங்கடா கொஞ்ச நேரம் அமைதியா
இருங்கடா.HODயும் வரார்,கொஞ்ச நேரம்"-சந்தோஷ் சார்.
வெட்டுன கேக்க கொடுத்துகிட்டு இருக்கும் போதே வந்துட்டாங்க.
     "யாரு இதுக்கு co-ordinator,
     ரெப் எங்க,
     எப்படி எல்லோரும் ஒரே மாதிரி டிரஸ் போட்டுயிருக்கீங்க,
    A-Batchக்கும் சொன்னோம்,C-Batchக்கும் சொன்னோம்
     உங்களுக்கு வேற தனிய சொல்லனுமா."  -HOD

"தம்பி இங்க வா அதெல்லாம் பிச்சு போடு"  -சுதாகர்.
"department functionக்கு use ஆகும்.எடுத்து வைப்பா."  - KSK


  
   "எவ்ளோ பணம் collect பண்ணான்'.
  "tweenty rupees".
   "இந்த சட்டை,பொண்ணுங்க போட்டிருக்கிற பிங்க் டிரஸ் எல்லாம் 20
   ரூபாய் தான். ஆமா எப்படி எல்லோரும் ஒரே மாதிரி தெச்சீங்க.
   இங்க வாம்மா,எவ்ளோ கொடுத்த?
   20 ருபானு மட்டும் சொல்லாத.இந்த டிரஸ் எப்படி எடுத்த"?.
   "நாங்களே எடுதுகிட்டோம்."
   "எங்க எடுத்த.கும்பகோனத்துலயா? எந்த வீதியில அட்ரஸ் சொல்லு?."
  "...."
 

  "இல்ல சார்,டிரஸ்க்கு இல்லாம twenty rupees".-சந்தோஷ் சார்.
  "அப்ப இது உங்களுக்கு தெரிஞ்சு தான் நடக்குது".

  "ITக்கு ப்ராஜெக்ட் dateட மாத்தி போடுறேன்.யாரும் sign போட கூடாது.
   பாக்கலாம்.இதுவரைக்கும் department functionக்கு காசு
   கொடுதிருப்பாங்களா?".  .
  "இனிமேல் இப்படி செய்யாதீங்க,எல்லோரும் போய்  இந்த uniformம
  மாத்திட்டு வேற டிரஸ் போட்டுக்கிட்டு அடுத்த கிளாஸ attend
  பண்ணுங்க."-KSK


  "நாளைக்கு நடக்கிற COMSEMக்கு எல்லோரும் காலைல 8.30கே வரணும்."
 
  "அந்த கேக்க வெளிய போடு"-சுதாகர்.
  "ஏன் வெளிய போடணும்? எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க"-ksk

3rd இயர் hostel messல,ஒரு தோசை தீஞ்சிடுச்சு,வேற வைங்கனு சொன்னா
அந்த தோசைய தூக்கி கீழ போட சொல்லிட்டு, வேற தோசை வைப்பான் அந்த
owner.அவனுக்கும் இந்த சுதாகருக்கும் வித்தியாசமே இல்ல.
   ஹாஸ்டல் students எல்லாம் கிளம்புங்கனு அனுபிட்டாங்க.
வெளிய வந்தவனுங்க,rally போனதுல பாவம் HOD,எவ்ளோ தூரம்
தான் பசங்கள துரத்திட்டு போவாரு.வயசாயிடுச்சுயில.

இப்பெல்லாம் white Dressச பாத்தாலே, இல்ல white dressச
பிடிக்கலியாம் HODக்கு.
 
  







 




    



Monday, April 12, 2010

the last day


As per attendence இன்னைக்கு(இது தான்) கடைசி நாள்.
எதுக்குமே அதிகமா கவலை படாத காலேஜ் லைப் கிட்டதட்ட
ஒரு முடிவுக்கு வந்துருச்சு.(12/4/2010).
எப்பவுமே backgroundல கேட்டுகிட்டிருக்கிற ஒரு இரைச்சல்,
அந்த இரைச்சலையும் தாண்டி இடியென,பின்புறத்தில் இருந்து
ஒலிக்கும் சிரிப்பும்,வலது புறத்தில் mostly காலியா இருக்கிற
சில deskக்கும்(மாஸ் கட்),அவங்களுக்கு பின்னாடி எப்பவுமே
பின் வாசல தூங்கிகிட்டே பாத்துகொள்கிற அந்த அஞ்சு
நட்சத்திர குரூப்பும்,எப்பவுமே லேட்டா வரும் அந்த நல்லவன்
குரூப்பும்,லீவே போடா தெரியாத,எப்பவுமே நிறைந்து இருக்கிற
எங்க deskக்கும்,எங்களுக்கு முந்தின deskக்கும்,எப்பவாவது
மொக்கை போடுற விக்கியும்,எப்பவுமே counter வாங்கும்
remo விக்கியும்,ஏதாவது எப்பவும் கேட்டுகிட்டிருக்கிற கண்ணனும்,
எழுத சொல்லியே கொல்ற ஆதியும்,(mostly)செமினார் எடுத்தே
தூங்க வைக்கிற girlsம்,மேட்ச்க்கு கூப்பிட்டு .......ற
கிரிக்கெட் டீம் கேப்டன் அரவிந்தனும்,பால்வாடி சிவாவும்,பாலச்சந்ரும்
தனபாலும்,பொண்ணுங்களைய பாத்துகிட்டிருக்கிற ராகவேந்திரனும்,
எழிலும்,நாங்க கவனிக்கிறமோ இல்லையோ sincereரா பாடம்
எடுத்த lecturerயும் i miss a lot.

Sunday, April 11, 2010

கார்த்தி வீட்டு விருந்து.

"எத்தன chicken கேட்டாலும் வைக்கிறாங்க.நானே ரெண்டு leg-piece சாப்பிட்டேன்".
கார்த்தி வீட்டு விருந்துக்கு போயிட்டு வந்ததும் வராததுமா, ஒரே பூரிப்பா
சொல்றான்.

"ஒரு 80 பேர் வந்திருப்பாங்க"னு mugக தூக்கிட்டு toilet போறான்.
பசங்கள பத்தி நல்லதாவே எழுத மாட்டியா,toilet போனத பத்தி
 எல்லாம் எழுதற அவங்கள பத்தின நல்ல விசயத்த எழுத மாட்டியா.நான் என்ன செய்யுறது இப்ப கூட நேர அங்கதான் போறான்,இவன் மட்டும் இல்ல மத்தவங்களும் தான்.அது ஒரு திருவிழா விருந்து போல இருந்துச்சு.



"முதல்ல ஒரு leg-piece வச்சாங்க,சாப்பிட்டுடேன்.இன்னொன்னு வேணுமான்னு 
கேட்டாங்க.நிறைய பேரு இருக்காங்கனு வேணான்னு சொல்லிட்டேன். 
பார்த்த Rajsekar இன்னொன்னு வாங்கிட்டான்.விடுவனா! நானும் இன்னொன்னு வாங்கிட்டேன்."


"எதோ ரெண்டு தடவ சாப்பிட்டோம்னு கொஞ்சம் தயிர் வாங்குனா,
""என்ன ராஜசேகர் dietனு சொன்னீங்க"",கேக்குறான்.அவன் சாப்பிடுவானு
பாத்த என்ன பாத்து சாப்பிட்டுட்டு இருக்கான்."
அது என்னமோ தெரியல ராஜசேகர் dietல இருக்கலாம்னு முடிவு பண்ணி 
ஒரு சில நாட்களுக்குள்ளே ஏதாவது ஒரு விருந்து வந்துடுது.
அதுக்காக சாப்பிடாம இருக்க முடியுமா.அப்போதைக்கு மட்டும் dietட 
cancel பண்ணிட வேண்டியது தான். 

அடுத்த விருந்து இளா வீட்டுல திங்கக்கிழம,புதன்கிழமை நம்ம வேலு வீட்டுல.





Wednesday, April 7, 2010

farewell dress

farewellடேவுக்கு எடுத்த டிரஸ் நிறைய பசங்களுக்கு பிடிக்கல.
அந்த பேட்ச்ச பாரு எவ்ளோ நல்லா டிரஸ் எடுத்திருக்காங்க.இவங்களும்
எடுத்திருக்காங்க பாரு,வெள்ளைல கோடு போட்ட சட்டை.
"farewellday ஏப்ரல்-17, அன்னைக்கு எல்லோரும் போட்டிட்டு வாங்கடா"
என்னது,12ம் தேதியே workingday முடியுது,இதுல எவன்டா அன்னைக்கு
வருவான்.பல பேரு அத தெக்கலாம வேணாவானு இருக்கான்.
மண்டபத்துல வச்சி சாப்பாடு போடுறானாம்(ரெப்) போங்க.
ஸ்லாம் book hot copyக்கு 400 கொடுங்கடா.(dai farewell cancel பண்ணுங்க.)




எப்படியோ பல நாள் அவன நச்சரிச்சு,பல தடவ தள்ளிபோய் இன்னைக்கு (7-4)
 ஹுசைனி வீட்டுல விருந்து.ஒரு வெட்டு வெட்டனும்னு கிளம்பிருக்காங்க.
காலேஜ் முடியபோறதனால என்னைக்கு விருந்துனு local பசங்கள
மத்த பசங்க கேட்டுக்கிட்டுகாங்க.ஒருத்தன் ரெண்டு பேருனா சமாளிக்கலாம்,
ஒரு கூட்டமே போனா....

Sunday, April 4, 2010

ஒரு,one fifty

காலேஜ்'ல ஒரு gangனா,அவங்களுக்குனு  ஒரு  T-Shirt,அவங்களுக்குனு ஒரு ஸ்டைல் கண்டிப்பா இருக்கும்.
மச்சி நம்ம gangக்குனு ஒரு T-Shirt வேணும் மச்சி.இல்லனா எப்படி மச்சி கெத்த
maintain பண்றது.

"மச்சி ஒரு 150 ருபாய் குடுடா.கிளாஸ்க்கு commonனா ஒரு T-shirt  எல்லோருக்கும் அடிக்குறோம்.  எல்லோரும் குடுத்தா மட்டும் தான் அடிக்குறோம்.ஒருத்தன் வேணான்னு சொன்னாலும் அடிக்கிறதில்ல.எல்லோரும் கொடுத்தா மட்டும் 
தான்.கடைசி வருசம்டா..ஒன்னா செய்வோம்".

அவங்க  gangக்கு மட்டும் எல்லோரும்  T-shirt அடிச்சிகிட்டு,கிளாஸ்க்கு
அடிக்கும் போது ,(அதே gangல)ஒரு சிலர் மட்டும் தரலனா அவங்கள  என்ன சொல்ல.கேட்டா (அப்படி) ஒரு T-Shirt தேவையே இல்லங்றான்.
இன்னும் ஒரு சிலர்,(மொத்த gang) காசு தராம,தனியா அவங்களுக்கு மட்டும் 
அடிக்கிறாங்க.
 "அவங்க என்ன சொல்லி நம்ம என்ன கேக்குறது,நம்ம தனியா அடிப்போம்."

அவங்கவங்க இஷ்டத்துக்கு அடிக்கும்போது "எதுக்காக batchday  கொண்டாடனும்."
"ஒரு சிலர் கொடுக்கலனா அதுக்காக கொண்டாடாம விட்டுட முடியுமா,
அவங்களுக்கே தெரியணும்".

"என்னடா சட்ட இது?"நல்லாவே இல்ல".இதுக்கா 150 தந்தேன்.
இத்தனை பேருக்கிட்ட வாங்குறானே,ஒரு முழு பீஸ காட்ட வேணா.
என் காச திருப்பி வாங்குறேன்".
"எவ்ளோ செய்றோம்,எல்லோருக்கும் பிடிச்சிருக்கு.ஒரு 150 தானே போனா 
போகட்டும்டா".
"அதுக்கு ,எனக்கு பிடிக்கல"
T-Shirt அடிகிறதுக்குள்ள இவங்க அடிச்சிப்பாங்க போல.

ஆனாலும்,நம்ம rep ரொம்ப நல்லவன்டா.எத்தன பேச்சு,எத்தன கேள்வி.
இத்தனையும் தாண்டி எப்படியோ முடிச்சிடுறான்.நம்ம rep ரொம்ப,ரொம்ப...

"மச்சி நம்ம departmentக்கு மட்டும் தனியே ஒரு T-shirt அடிக்கபோறோம்,ஒரு 
150 ரூபாய் கொடுங்கடா".
 "மச்சி hostel பூராவும் ஒரு T-Shirt அடிக்கபோறோம்,ஒரு 250 ரூபா குடுங்கடா?"
"farewell day வுக்கு ஒரு 400 கொடு மச்சி."
இன்னும்  காலேஜ் முடியறதுக்குள்ள எத்தன 150 கேப்பாங்களோ.
இது  கூட ஒரு காரணமா இருக்கலாம் அவங்க கொடுக்காததுக்கு.

(see class gangs and their lists in college gallery)

Thursday, April 1, 2010

எல்லோரும் எழுதுவோம்.

பல  பேர் ஸ்லாம் புக் கொடுத்து,எழுத சொல்றாங்க.
கடிதத்துக்கு ஏற்பட்ட நிலைம தான் இப்ப ஸ்லாம் புக்குக்கு.
எதுக்குடா ஸ்லாம் புக் எழுதணும்."உன்னை எனக்கு இத்தனை
வருசமா தெரியும்,நாம இப்படி பழகுனோம்,அங்க போனோம்,
இங்க போனோம்".இத தான் எழுதபோறோம்.இது எனக்கு தெரியாதா.
இத வேற எழுதணுமா.அதுவுமில்லாமல் இன்டர்நெட்,மெயில்,பேஸ்புக்னு
வந்துடுச்சு.அதுலயே chat பண்ணிக்கலாம்,மெயில் பண்ணிக்கலாம்.
இத விட போன் வேற இருக்கு,தோன்ற நேரத்துல கால் பண்ணிக்கலாம்.
இது 21st centuryடா இன்னும் ஸ்லாம் புக் எழுதிட்டு இருக்கணுமா
என்ன?.இந்த நோட்ல எழுதுனா தான் நீ என்ன ஞாபகம் வச்சுக்குவனா அப்படி ஒரு நட்பே தேவ இல்லை.நான் உன்னை நெஞ்சில வச்சி இருக்கேன்.
ஒரு ஸலாம் புக் எழுத சொன்னா எப்பா, எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க.
என்ன தான் technology வளந்திருந்தாலும் நம்ம கை பட எழுதனத நாளைக்கு திறந்து பாக்கும் போது வரும் அந்த சந்தோசம் மெயில்லையோ  இல்லை மத்ததிலோ வராது.இப்பவே ஒரு கால் பண்றதுல,இதுல காலேஜ் முடிஞ்சு மெசேஜ்,சாட் எல்லாம் சான்ஸ்சே இல்ல.எழுதருதுக்கு சோம்பேறித்தனம்  பட்டே சில பேர் எழுதறதில்ல. கிளாஸ்ல  எல்லோர்கிட்டேயும் நாம க்ளோஸ்சா இருக்கிறதில்ல.அந்த பசங்கள எப்படி ஞாபகம் வச்சிபாங்க.
தோன்ற கவிதையோ கன்றாவியோ,இல்ல கோபமோ கதையோ, பொய்யோ  + உங்க பிறந்தநாள் தேதி எழுத எவ்ளோ நேரம் ஆகபோகுது.
நாளைக்கு அந்த புக்க பாக்கும்போது மட்டும் தான், சில பேருக்கு இப்படி ஒருத்தன் இருந்தானானு   தோணும்.அதனால யார் கேட்டாலும் எழுதுங்க.நானும் எழுதுவேன். 

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub