Saturday, May 22, 2010

FAREWELL DAY

இத எழுதும்போது farewellல முடிச்சிட்டு வந்திருந்தேன்.நிஜமாவே இது மறக்க முடியாத ஒரு நிகழ்வு.அதுக்கு ரெண்டு காரணம்.ஒன்னு மேல சொன்னது,இன்னொன்று கடைசியில சொல்றேன்.

முதல்ல farewellக்கு வந்தவங்களுக்கு thanks.
farewellலுக்கு வராதவங்களுக்கு என்ன பிரச்சனையோ,காரணமோ தெரியல.
ஒரு சிலர் எதை செஞ்சாலும் குறை சொல்லத்தான் செய்றாங்க.விடுங்க farewellல நடந்தத பாப்போம்.என்னோட personal thanks கண்ணனுக்கும்,அபிலாஷ்க்கும் எவ்ளோ கஷ்ட்டப்பட்டு இத organise
பண்ணாங்கனு எனக்கு தெரியும்.வராதவங்கள பத்தி நிறைய பேரு வருத்தப்பட்டாங்க.ஒருவேளை இதுவும் ஒரு சாதாரண நாளா தெரிஞ்சிருக்கலாம்.

காலைல 9.0 மணிக்கு எல்லோரும் வந்துடுங்கனு சொல்லிட்டு போனான் rep.பாவம் அவனுக்கு எங்க தெரியும் hostelல பசங்க அந்த டைம்க்கு மேல தான் நல்லா தூங்குவாங்கனு.நாங்களும் எழும்
போது 9.0 ஆயிடுச்சு.ஹாஸ்டல்ல நாங்க தான் கொஞ்சம் முன்னாடியே விழிச்சவங்களா இருப்போம்.9.30 க்கு மேல தான் குளிக்கவே போனாங்க கிரிமினல்ஸ்.அங்க என்னடானா 8.30ல இருந்தே காத்துகிட்டிரு
ந்தாங்க சத்ரியாஸ். அங்க போய் பாத்தா ஒரு 10, 10.30 க்கு மொத்தமே ஒரு 30 பேருதான் இருந்தாங்க.(எங்களோடு சேர்த்து).அபிலாஷோட அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி வந்திருந்தாங்க.முதலில்
வந்தது கார்த்திக் சார்.

போனதும் விசாரிப்புகள்,ஏகப்பட்ட கட்டிப்பிடி வைத்தியங்கள்,போன் நம்பர் பரிமாற்றங்கள்,ஸ்லாம் புக் எழுதச்சொல்லி அன்புத்தொல்லைகள்-புள்ளரிக்க விட்டுட்டாங்க.(நானும் ஒரு பத்து
பேருக்கு ஸ்லாம் எழுதியிருப்பேன்).கொஞ்ச நேரதிலயே கேமரா chargeயை பாதி தீர்த்திருப்பாங்க அவ்ளோ போட்டோ எடுத்தாங்க.எத்தன போஸ்,முடியல.அடுத்து வந்தவர் சந்தோஷ் சார்,தொடர்ந்து
eleven criminals வந்தாங்க.அதுலயும் சில பேர் மிஸ்ஸிங்.பொண்ணுங்க ரொம்ப சிலர்தான் வந்திருந்தாங்க.கடைசியா வந்தது அரசக்குமார்.ஆளுக்கு ஒரு நினைவு பரிசு கொடுத்தாங்க.



முதலில் ஆரம்பிச்சவர் சந்தோஷ் சார்,"உங்களை எல்லாம் நான் என் தம்பிகளா தான் பார்த்தேன்".
அவரை தொடர்ந்து கார்த்தி சார்.
நான் பார்த்ததிலயே எனக்கு பிடிச்ச batch இதுதான்-இது அரசக்குமார்.
இவங்கள தொடர்ந்து ரெப் கண்ணன்,assistant rep ஆதி,coordinator அபிலாஷ் அப்புறம் பேசனும்னு ஆசைபட்டவங்கள கூப்பிட்டு பேச வச்சாங்க.


ஒவ்வொருத்தரும்,பேசும் போது அவங்க gang membersச கூப்பிட்டு,பக்கத்தில வச்சுக்கிட்டு அவங்க gangக பத்தியும்,கிளாஸ பத்தியும்,அவங்க அறிமுகம் ஆனது பத்தியும்,செய்த சேட்டைகள் பத்தியும்,staffs பத்தியும் நிறைய பேசுனாங்க.அப்புறம் தான் களைக்கட்ட ஆரம்பிச்சது.


பிரபாவும்,இளாவும் ரொம்ப அழகா,எதார்த்தமா பேசுனாங்க.11 criminalsல அலெக்ஸ்,கோவியும் நல்லா பேசுனாங்க.அப்புறம் கேட்டவன் gangல மணிகண்டன் பாட்டு பாடுனான்.மியூசிக் போட்டது
இளா.நல்லா இருந்துச்சுங்க.five star சார்பா பேசுனது ஆனந்த & கார்த்திக்.அவங்க தலைவர், இன்னும் சில முக்கிய members வரல."கடைசியா அடேங்கப்பா அணி".
அப்புறம் பொண்ணுங்கள்ல ஜூடி,நாகேஸ்வரி இன்னும் சிலர்(விடுபட்டவங்க தயவு செய்து மன்னிச்சிடுங்க).


கிரிக்கெட் விளையாடுனப்ப,டூர் போனப்பனு ஏற்ப்பட்ட பிரச்சனைக்கு பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுகிட்டாங்க 11 criminalsம்,சத்ரியாஸ்ம்.ஜூடியும் அரவிந்தும் மன்னிப்பு கோரியவர்களில் இன்னொரு சாரர்.

ஒவ்வொரு அணியினரும் சொன்ன சில சுவையான விஷயங்கள்.

எங்க gang weight தான்,ஏன்னா எங்க gang துணை தலைவர் நவீன்  மட்டுமே 120
kilo - இது அடேங்கப்பா அணி செயலாளர் சிவா.

1st yearல போய் பார்த்தேன் பொண்ணுங்களே இல்ல.ஒரு வருஷம் இப்படிதான் ஓட்டனுமானுவருத்தப்பட்டேன்.second yearல பார்த்த,பொண்ணுங்க எல்லாம் அழகழகா இருந்தாங்க especially சாதப்பாடி.


இந்த ஆளு எதோ 4,6னு internal போடுவாருனு சொன்னாங்க.பார்த்த 40 போட்டிருக்கார்(அரசக்குமார்) எது எழுதுனாலும் பாஸ் போடுறதுக்கு சந்தோஷ் மாதிரி ஆள் இருக்கும் போது நாங்க எங்க படிச்சோம்.

                     -இது சத்ரியாஸ் gangகோட தூண் பிரபா.

சந்தோஷ் சார் கிளாஸ பத்தி என்னைக்குமே கண்டுகினதே இல்லை,ஏன்னா எப்ப போனாலும்
விட்டுடுவார்- alex.

முதல் நாள் கிளாஸ்ல கார்த்தி சார பாக்கும் போது எதோ,போன வருஷ பையன் rejoin  ஆயி வந்திருக்கான்னு நினைச்சேன்.அப்புறம் தான் தெரியுது sirனு. -பெரியப்பா.

நான் பொண்ணுங்க கிட்ட அதிகமா பேசுனதே இல்ல - ஜெயமணி.
(ஒரு கிலோ அரிசி எத்தன கிலோ ஜெயமணி).

என்ன ஆச்சரியம் (மாட்டு)சிவா இன்னைக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்தான்.
பேசாலாம்னு போனான்,பேசல. அதுவே பெரிய விஷயம்.(நான் சொல்லல,அவனே சொன்னான்.)

தீபக் ஒரு கதை சொல்லி மத்தவங்களுக்கு   உங்களால முடிஞ்ச அளவுக்கு உதவுங்கனு சொன்னான்.
ஸ்ரீராம்,ராஜசேகர்,ரெட்டி.ஹமீது,பிரேம்,சங்கரி,ஜோனு நிறைய பேரு பேசுனாங்க.
(விடுபட்டவர்கள் மன்னிக்கவும்)

கிட்டத்தட்ட ரெண்டு மணிக்கு வந்துச்சு லஞ்ச்.(என்ன ஒரு pups,ஸ்வீட் & 7up or coke).
எல்லாம் முடியும் போது கிட்டத்தட்ட 2.30  ஆயிடுச்சு.

யாரும் அழல ஆனால் பல பேரு கண்ணு கலங்கிட்டாங்க.வெளிய வரவே மனசு இல்ல.
வரும்போது சொல்ல வார்த்தை இல்ல,எதையோ விட்டு போறதா ஒரு பீலிங்.எங்க போய்ட போறோம்,சந்திப்போம்.

இதுவெல்லாம் முடிஞ்ச அப்புறம் என்ட்ரி கொடுக்கிறான் நாகா.பண்ணி.

இந்த நாள் மறக்கமுடியாதது,அந்த இன்னொரு காரணம்,farewell முடிச்சிட்டு வரும் போது ஒரு சின்ன accident.யாருக்கும் அதிகமா அடியில்லை.அங்கங்க சின்ன scratches.
வண்டியில வந்தது நான்,மாட்டுசிவா,சிவாராமகிருஷ்ணன்.
விழுந்ததுகப்புறம் வலியில்லை,இதுவும் ஒரு மறக்கமுடியாத சம்பவமா ஆயிடுச்சுன்னு
ரசிச்சோம்.திடீர்னு குறுக்கில வந்த மாட்டுக்கு என்ன ஆச்சுன்னு எங்களுக்கு தெரியல.
எப்படியோ அந்த மாட்டுக்கு ஒரு தேங்க்ஸ்.
Ragavendran,siva,rajsekar,suriya,arvindhக்கும்.   































                         


































Thursday, May 20, 2010

படம்

கடைசி கொஞ்ச நாள்,நிறைய படம் பார்த்தோம்.இத்தனைக்கும்
செமஸ்டர்.எப்பவுமே ரூம் தியேட்டர் மாதிரி கூட்டமாவே
இருக்கும்.ஒவ்வொரு பேப்பருக்கும் கேப்ல,ஒரு நாளைக்கு
மூனு,நாலுனு போச்சு.இந்த செமஸ்டர்ல தான்
mechanical பசங்க ரொம்ப க்ளோஸ் ஆனாங்க.சேர்ந்து
எல்லோரும் பார்ப்போம் விடிய விடிய.அப்புறம் சமீபத்துல
பழக்கமான CSE பசங்க,கார்த்தி,தெரிஞ்ச தெரியாத பசங்கனு
எல்லோரும் பார்த்தோம்.
                                                   




























எழில் தன்னோட பர்த்டேவுக்கு AA வுல  ட்ரீட் வச்சாரு.






Monday, May 17, 2010

ப்ராஜெக்ட்

எல்லா எக்ஸாமும் முடிஞ்ச அடுத்த நாள் என்ன செய்யுறதுனே தெரியல.


எல்லோரும் ப்ராஜெக்ட் வைவாவுக்கு தயார் ஆயிட்டிருந்தாங்க.எனக்கு அந்த கவலை இல்ல ஏன்னா ராஜசேகரும் ஸ்ரீராமும் அத பார்த்துக்கிட்டாங்க, பார்த்துகிட்டிருகாங்க.எதையோ இழந்த மாதிரி,வழக்கமா கிளாஸ்க்கு போறது தடைபட்டதாலோ,இல்ல இன்னும் ரெண்டுநாள்ல எல்லாமே முடிஞ்சிடுங்கிற அந்த உணர்வோ தெரியல.






எங்க ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும் போது இது முடியுமானு doubtடா இருந்துச்சு.
நாங்களும் எத்தனையோ topic கொண்டு போய் மேடம்கிட்ட காண்பிச்சோம்.
அதுல செய்,இதுல செய்னு இமேஜ் சம்பந்தப்பட்ட ப்ராஜெக்ட் செய்யுங்கனு
சொல்லாமல் சொல்லிட்டாங்க.Topic கொடுக்கவே லேட்டானதுனால
நாங்க ஒரு ஒரே ஒரு preview மட்டும் தான் எடுத்தோம்.அதுவும் ஸ்ரீராம்தான்
எடுத்தான்.








எங்களுக்கு அந்த டைம்ல help பண்ண சார்,ஆனந்த நடராஜன்.
அவர் இல்லனா இத முடிச்சிருக்கவே முடியாது.அவர் இங்கயே M.E.படிக்கிறார்.அவருக்கு நன்றி சொல்லியே ஆகணும்.
அவருக்கு help பண்ணது ராஜசேகரும்,ஸ்ரீராமும்.நானும் சிவாவும்
ipl match பாக்க போய்டுவோம்.record போடும் போது பல நாள் சாபிடாம
கூட(ஒரு நாள்) சுத்துனது ராஜசேகர்.அடுத்த நன்றி இவங்களுக்கு.


இந்த topic எடுக்க காரணமா இருந்த அருள்செல்வி மேடமுக்கு 'பெரிய"
தேங்க்ஸ்.எதோ அரைகுறையா சொல்லி வெற்றிகரமாக முடிச்சிட்டோம்.


Thursday, May 13, 2010

நினைவுகள்

காலேஜ் படிக்கிற பசங்க + பொண்ணுங்க எல்லோருக்கும் அந்த நாள் கொஞ்சம் இல்ல ரொம்ப வருத்தமான நாள்தான்.பொதுவாவே அந்த நாள எதிர்கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான்,இன்னும் சிலர் அந்த நாள விரும்பவே மாட்டாங்க.காலேஜ் கடைசிநாள யாருக்குத்தான் பிடிக்கும், ஒரு சிலரை தவிர.இத எழுதும் போது கடைசிநாள் இல்ல, so கடைசி நாள் எப்படி இருந்துச்சுன்னு அடுத்த போஸ்ட்ல எழுதுவேன்.நானும் ஆவலோடுதான் காத்துக்கிட்டிருக்கேன்.finalyear ஆரம்பிக்கும் போது இன்னும் ஒரு வருஷம் இருக்குனு நினைச்சேன்.8th செம் ஆரம்பிக்கும் போது இன்னும் ஒரு செம் இருக்குனு தோனுச்சு.இப்ப இத எழுதும் போது கூட இன்னும் ஒரு வாரம் இருக்குனு தேத்திகிட்டேன்.

காலேஜ் சேரும் போது யாரோ என்கிட்டே காலேஜ் பிடிச்சிருக்கானு கேட்டாங்க.அப்ப எப்படா வீட்டுக்கு போலாம்னு இருக்குனு சொன்னேன்.எங்களுக்கும் பிடிக்கல,இருந்தாலும் பசங்கள விட்டு போகும் போது உனக்கு புரியும்னு சொன்னதுக்கான அர்த்தம் எனக்கு இப்ப புரியுது. ”நான் தண்ணி அடிச்சிருக்கேன்னு நினைக்காத!.இந்த வழியா வந்தேன்,எத்தனையோ தடவ உங்க ரூமுக்கு வந்திருக்கேன்.இனிமேல் உங்கள பாக்க முடியுமோ இல்லையோனு தோணுச்சு,அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்”. திடீர்னு ஜெயமணி வந்து சொல்லிட்டு போனான்.உண்மைதான் exam ஆரம்பிச்சதுல இருந்து பல பேர பாக்க கூட முடியல.ஸ்கூல் முடியும் போது கூட இந்த அளவுக்கு வருத்தம் இருந்ததில்ல.இப்ப கொஞ்ச நாளாவே காலேஜ் முடியப்போகுதே அப்படீங்கற வருத்தம் எல்லோருடைய முகத்துலயும் நல்லாவே தெரியுது.சில பேர் சும்மா சொல்லலாம் வருத்தமே இல்ல விட்டதும் மூட்டமுடிச்சு எல்லாம் கட்டிக்கிட்டு ஓடிடுவேனு ஆனாஅவங்க மனசு அவங்களுக்கே சொல்லிடும்.

 “ஆரம்பத்துல காலேஜ் போனோம் வந்தோம்னு இருந்துட்டோம்.இப்பதான் எல்லோரும் நல்லா க்ளோஸா பேசுறாங்க.ஆரம்பதுல இருந்தே இப்படி இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.”-206 பிரபா.கொஞ்ச நாளாவே அருள் எங்க ரூம்ல அதிக நேரம் வழக்கத்துக்கு மாறா பேசிக்கிட்டிருக்கான். நிஜமாவே காலேஜ் முடியப் போகுற இந்த கடைசி சில நாட்களா தான், பல அறிமுகமில்லாத பசங்க கூட க்ளோஸ் ஆயிட்டாங்க.வாழ்க்கைல முக்கியமான ஒரு பகுதி,காலேஜ் லைப் கிட்டத்தட்ட, இல்ல முழுசாவே முடிஞ்சிருச்சு.இது போல ஒரு chance எத்தன பேருக்கு திரும்பவும் கிடைக்கும்னு தெரியல.பல பேருக்கு கிடைக்காமல் கூட போகலாம்.இங்கு கத்துகிட்ட பல விஷயங்கள்,சந்தித்த நண்பர்கள்,பழகிய நாட்கள் எல்லாமே பின்னாடி நல்ல நினைவுகளா மாறிடும். சில விரும்பாத நிகழ்வுகள் உட்பட.இப்ப ரொம்ப நெருங்கிய நண்பர்களா இருக்கிறவங்க கூட காலப்போக்கில் மறக்க நேரிடலாம்.ஆனால் இந்த காலேஜ் லைப் நிச்சயமா மனசுல இருந்துகிட்டே இருக்கும்.

அப்புறம் வழக்கமா சொல்ற அந்த ஏதாவது ஒரு விதத்துல தெரிஞ்சோ தெரியாமலோ மத்தவங்கள புண்படுத்தி இருந்தால் மன்னிச்சிடுங்க.இன்னொரு விஷயம் டாக்டர் சிவாகிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்கிறேன்.சாரி சிவா



.

Hostel life


காலேஜ் லைப்ல,காலேஜ்ஜோட சேர்ந்த இன்னொரு அங்கம்,காலேஜ் லைப்ப இன்னும் சுவையா மாத்துறது ஹாஸ்டல்.ஹாஸ்டலுக்குனே தனி ரூல்ஸ் இருக்கு.பசங்க உருவாக்கியது.இப்படி தான் இருக்கணும் அப்படீங்கிறதே இருக்ககூடாது.நிஜமாவே வெளிய ரூம் எடுத்து தங்கி இருக்கிற பசங்கள விட ஹாஸ்டல் பசங்க தான் காலேஜ் லைப்ப நல்லா என்ஜாய் பண்ணியிருப்பாங்க.பொதுவாவே பசங்க தங்கியிருக்கிற ரூம் எப்படி இருக்கும்னு சொல்ல தேவயில்ல.அதுவும் ஹாஸ்டல் ரூம்னா chanceசே இல்ல எப்பவுமே ரூம் குப்பையாவே இருக்கணும் இதுதான் குறிக்கோளாவே எல்லா ரூம் பசங்களும் வச்சிருப்பாங்க.வாரத்துக்கு ஒரு தடவை கூட்டினாலே அது பெரிய விஷயம்.கண்டது கண்ட இடத்துல இருக்கும்.ஒரு பொருள ஒரு இடத்துல வச்சுட்டா அது பல நாள் அங்கேயேதான் இருக்கும் அடுத்த தடவ கூட்டுற வரைக்கும்..எங்க ஹாஸ்டலுக்கு இந்த restrictionனும் கிடையாது.எப்ப வேணும்னாலும் வரலாம் போலாம்.எந்த ரூம்ல வேணும்னாலும் தங்கலாம்.என்ன வேணும்னாலும் செய்யலாம்.எவனுக்காவது birthdayனா அவன் அன்னைக்கு செத்தான்.””அடி”யோட” அவன் ஹாஸ்டல மறக்கவே மாட்டான்.நல்லா தான் இருப்பாங்க திடீர்னு பசங்க எல்லோரும் கத்துவாங்க என்னடான்னு பார்த்த எவனாவது குளிச்சிகிட்டு இருப்பான் அதுக்குத்தான் கத்தியிருப்பாங்க.போகும் போதும் கத்தவேண்டியது வரும் போதும் கத்தவேண்டியதுஎதுக்குன்னு எவனுக்கும் தெரிஞ்சிருக்காது. ஒருத்தன் ரூம்ல இருந்து இன்னொருத்தன் ரூம்னு ஹாஸ்டல் முழுசா ஒரே படம் வச்சியிருப்பாங்க.அப்புறம் ஒரு ரூம்ல படம் ஒடுச்சுனா அந்த ரூம் அன்னைக்கு theatreரா மாறியிருக்கும்.mugக்கும் bucketக்கும் ஹாஸ்டல் முழுதும் சுத்துறதுனு நிறைய.அன்னைக்கு லீவ்னா குளிக்கிறதும் கிடையாது.ரெண்டு நாள் லீவ்னா ரெண்டு நாளும்.தூங்கி எழுந்தா சாப்பாடு.பிடிச்சா பல்லு துலக்கு இல்லையா அதுவும் இல்ல.எதுக்கும் கவலை படாத வாழ்க்கை.ரூம்லயே சரக்கு,தம் எல்லாமே.காலேஜ் லைப்ல ஹாஸ்டல் ரெண்டாவது வீடு.dayscholar பையன்,ஒரு ஹாஸ்டல் பையன அடிச்சுட்டா ஹாஸ்டலே திருப்பி அடிக்க போகும்.
ஹாஸ்டலுக்கு ஆகாத இன்னொரு விஷயம் மெஸ்.ஹாஸ்டல் மெஸ்ல வேலை செய்யுறவங்களுக்கு தட்ட தேடுறதுதான் பெரிய வேலையா இருக்கும்.சாப்பாடு பிடிக்கிலையா தட்ட தூக்கி வீசு,வேலை செய்யுறவன பிடிக்கலையா அதுக்கும்.இங்க வந்துதான் வாழ்க்கைல உள்ளங்கைக்குள் அடங்கும் பூரியையும்,தோசையையும் பாத்தேன்.எக்ஸ்ட்ராவுக்கு பெரிய பூரித்தான்.இந்த மெஸ்ல இதுவரைக்கும் எந்த strikeகும் நடக்கல.ஹாஸ்டல்ல நான் மிஸ் பண்ண ஒன்று,இதுவரைக்கும் 2nd floorல உள்ள அந்த பாத்ரூம பாத்தது கூட இல்ல.

Wednesday, May 5, 2010

velappan treat

நாங்க கொஞ்சம் லேட்டாதான் வந்தோம்.
எங்களுக்கு முன்னாடி நிறைய பேர் வந்துட்டாங்க. (sathriyaas)
சாப்பாடு நல்லா இருந்துச்சு.





















Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub