Sunday, February 28, 2010

Eleven Criminals Verses (?) criminal killers(மாற்றத்திற்கு உட்பட்டது )

 கிரிக்கெட் மேட்ச் எப்படி ஆரம்பிச்சாங்கனு தெரியல, Eleven criminals கும் கிரிமினல் பில்லர்ரோ இல்ல கிரிமினல் கில்லர்ரோ இல்ல சத்ரியாஸ்சோ(எத்தன "இல்ல" போடுறது பேர முடிவு பண்ணுங்க பாஸ்).

பேரு தான் Eleven Criminals வேற எதுவும் இல்ல.என்ன மேட்ச் விளையாடும் போது ஏதாவது புள்ள பூச்சிய கொன்னு இருப்பாங்க.இந்த eleven criminals அருள பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும்.இந்த eleven criminal gangla அதிக enquiry attenend பண்ணது அவனாதான் இருப்பான்.அதனால் எல்லாம் அவன் ஒன்னும் பெரிய ஆளு கிடையாது.என்ன வடிவேல்,தானே ரௌடின்னு சொல்லிகுவார்,ஆனா இங்க வார்டேனே இவனே ரௌடின்னு கூட்டிட்டு போயிடுவாரு .hostelல  எங்கயோ birthday கொண்டாடுவாங்க ஆனா 203 ரூம் பசங்க தான் mostly மாடுவாங்க.Eleven Criminal பேருக்கும் அருளுக்கும் எந்த சம்மதமும் கிடையாது.
(என்னையும் ஒருதடவ warden ரௌடின்னு சொல்லலி இருக்கார்,இது உண்மை. வேணும்னா ராம கேளுங்க).அருளோட சந்தோஷ் கார்தினு இன்னும் ரெண்டு கிரிமினல்ஸ்ம் உண்டு.சொல்ல மறந்துட்டேன் அருள்தான் ஒரு சிறந்த bowler
(உண்மைதான்,நம்புங்க நானும் ஒரு Bowler தான் (அதே வடிவேல் ))

பில்லரோ,கில்லேரோ அந்த பேர் வைக்காத கோஷ்டிதான்,first eleven criminalsa matchuku கூப்பிடார்களாம்.அந்த ஒரு சில வாரத்துல ரெண்டு குரூப்ம் வெறியோட திரிஞ்சாங்க.ITல B batch தான் Weight அதுல eleven Criminal தான் weight டாம்,அதனாலேயே அவங்கள ஜெயிக்கணும்னு பில்லர்ஸ் விளையாடி முதல் ரெண்டு மேட்ச்ம் Win பண்ணாங்க.எங்க டீம்ல நட்சத்திர பிளேயர்ஸ் இல்லாம விளையாடி வின் பண்ணிடீங்க அதனால இது செல்லாதுனு அடுத்த நாலு ஆட்டம்னு போட்டு, மொத்தம் 3-3.என்னைக்கு finalo தெரியல.இந்த மேட்ச்க்கு
டீ ஷர்ட் வேற(காலேஜ்ஜே முடிஞ்சிருச்சு),இதுல டீம்முக்கு பேரு  என்னனு தேடிட்டு இருக்காங்க.
(இத்தனை நாள் சொன்ன பேரு?).
ராகவன்  தான் இந்த அணியின்சிறந்த வீரர்.அப்புறம் பிரபா தான் opening Bowler.

கடைசியாக கிடைத்த தகவல் படி  totoodaing   வக்கிராங்கலாம்(பேரு).

Saturday, February 27, 2010

எல்லாமே பேச்சுதான்

 கிளாஸ்ல நானும் நவீனும் மோஸ்ட்லி ஒன்னா உட்காந்ததில்ல.எப்பவாவது நடக்கும். அன்னைக்கு ரெண்டு  பேரும்  ஒன்னா உட்காந்தோம்.
        "நவீன் உங்களால ஒரு நாலரை வரைக்கும் பேசாம உட்கார முடியும்மா"?
     
       "என்னங்க  இப்படி சொல்லிட்டீங்க! என்னால ஒரு மணிநேரம் கூட பேசாம
        உட்காரமுடியாது,ஒரு அரைமணி நேரம் கூட, ஏன் ஒரு அஞ்சு நிமிஷம் கூட.
        என்னை சாவ சொல்லுங்க சாகறேன்! ஆனா பேசாம மட்டும்  இருக்கவே  முடியாது.இந்த விசயத்துக்காக  என்ன  கஷ்டபட்டிருபேன்! என்னென்னமோ பண்ணி பாத்தாங்க.ஒன்னும் நடக்கல. கிளாஸ்ல எப்பா பாத்தாலும்  பேசிட்டே இருபேன்.
பாவம் அந்த maths டீச்சர்  என்ன பேச விடாம தடுக்க என்னென்னமோ பண்ணுவாங்க.கிளாஸ்ல ஒருத்தன்  பேசவே மாட்டான்.அவனோட என்னையும் சேர்த்து first deskla உட்கார வச்சுடாங்க.என்னால சும்மாவே   இருக்க முடியல.  எப்படியோ அவனையும் என்னோட வழிக்கு கொண்டுவந்துடேன்.இப்ப கூட அந்த பையன்  ஒரு   நாள் பார்த்தான்,"ஏங்க நவீன் நா பாட்டுக்கு சிவனேன்னு கெடந்தேன்,எங்க ஆஸ்டேல்ல ரூமுக்கு ரெண்டுபேருதான் அதுலயும் ஒருத்தன் NORTHINDIAN .என்னால பேசவும் முடியல பேசாம இருக்கவும் முடியலனு இப்படி பண்ணிடீங்லேனு   புலம்புறான்".இப்படியே பண்ணிகிட்டிருகேன்னு மேடமோட  chairla  எல்லாம் உட்கார வச்சாங்க.அப்பவும் கீழ   உட்கார்ந்தவன்களோட பேசுனேன்.பாவம் அந்த மேடம்.ரொம்ப கஷ்டபட்டுடாங்க.யாரு பேசுனாலும் நான்தான் மாட்டுவேன்.இப்படியே சும்மா ஒரு கிளாஸ் புல்லா  பேசுனான்.இவன் இப்படி.
 
      ம்...
      ...........
     ஆம் ...
      ..........
     சொல்லு...
      ..............
      ம்......
 
    இவ்ளோ தான் நமக்கு  கேக்கும்.ரொம்ப பக்கத்துல உட்கார்ந்து இருக்கிற  நமக்கே கேக்காது என்ன பேசுறாங்கனு.எப்படி தான் அவங்க மட்டும் புரிஞ்சிகிறாங்கனே எனக்கு தெரியல.(இதுலயும் கொஞ்சம் டெலிபதிஇருக்குமோ தெரியல).ரெண்டு மூணு வருசமா ஒரு நாளைக்கு ரெண்டு மூணு மணி நேரம்னு அப்படி என்னதான் பேசுறாங்களோ தெரியல."நீயும் நானும் இப்ப பேசுறோமே அது மாதிரிதானு சொல்றாங்க  சுரேஷ்(இது நவீனு).பேசி பேசியே கரெக்ட் பண்ணுறது இது தானோ என்னமோ?.
தூங்கும்போது  கூட கொடி காத்த குமரன் மாதிரி கைளியே பிடிச்சுட்டு  இருந்தா
என்ன பண்ணுறது போங்க..காதலதூக்கி நிறுத்துராங்கலாம்.

Monday, February 15, 2010

ஆரம்ப நாட்கள்

நாலு வருட பயணம் முடியபோகுதுங்கிறத நான் உணர்றன்.ரொம்ப தூரத்துல அது இல்ல. காலேஜ் இன்னும் ரெண்டு மூனு மாசத்துல  முடியபோகுதுங்கிறத  இப்ப நினைச்சாலும் நம்ப முடியல.  இப்பதான் காலேஜ் சேர்ந்த  மாதிரியே இருக்கு.முதல் நாள் கம்ப்யூட்டர் லேப்ல சிஸ்டத்த  ஆன் கூட பண்ண தெரியம்மா  நான் உட்காந்ததும், எனக்கு சூர்யா எப்படின்னு சொல்லிகொடுத்ததும் இன்னும் நினைவிருக்கு.ஒரு விதத்துல சூர்யாதான் எனக்கு குரு மாதிரி.ஆரம்பத்ததுல  கிளாஸ்ல சூர்யாவ பாக்கும் போது பயமா இருக்கும். கொஞ்சம் பெரிய ஆளு மாதிரி தெரிவான்.யாரவது ஒருத்தன் சி ப்ரோக்ராம் செஞ்சு ஏர்ரர் இல்லாம வச்சுயிருப்பான்.அத அப்படியே காப்பி  பண்ணி அதுல இருக்கிற அவங்களோட பேரை மாத்தி இவங்க  செஞ்ச மாதிரி காட்டுவாங்க.(நம்ம அரவிந்த்தான்) அத பாத்த நான் பயந்துட்டேன் என்னடா இவங்க என்னென்னமோ செய்யுறாங்க,நமக்கு ஒன்னுமே தெரியலயே(இத கூட).அத எனக்கு கொஞ்சம் சொல்லிகுடுடா நானும் அவுட்புட் வாங்கிகிரன்டானு கேட்டுயிருக்கேன்.இருடா சொல்றன்ம்பான்.ம்..ஹூம். கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் படிச்ச சூர்யாவுக்கும் அது தெரியாது.காலேஜ் வந்து சேர்ரவரைக்கும் எனக்கு  சிஸ்டத்த கூட ஆன்  பண்ண தெரியாது.(நா பயொலாஜி).அப்புறமா தான் கத்துகிட்டேன்.சூர்யா தான் இந்த BASIC   MS PAINT ,WORD , NOTEPAD எல்லாம் சொல்லி கொடுத்தான்.கம்ப்யூட்டர் லேப்ல நான் பட்ட பாடு பெரும் பாடு. First yearல IT ஸ்டுடென்ட்ல எனக்கு தெரிஞ்சா ஒரே ஆள் சூர்யா மட்டும் தான்.
          காலேஜ் கிளாஸ் ரூம்ல first நாள் first hour (நான்) பார்த்த முதல் ஆள் விஜயதீனன். நல்லா ஞாபகம் இருக்கு.சிதம்பரத்த எனக்கு காண்பிச்சவனே அவன்தான்.சிவில் department அவன்.அவனோடு தான் நான் போய் பெட்ஷீட், பாய், பக்கெட்னு   எல்லாம் வாங்கினேன்.first year என் கூட அதிகமா இருந்ததும் அவன்தான்.அவனோட சைக்கிள்ல தான் நாங்க சுத்துவோம்.அத்தோட சரி அதுக்கப்புறம் அவன நான் பாக்கவே இல்ல இப்பவரைக்கும்.இப்ப அவன் இன்னமும் இங்க தான் படிக்கிறானானும் எனக்கு தெரியல.இல்ல discontinue பண்ணிட்டு  போய்ட்டானானும் தெரியல. பசங்கலுக்கும் தெரியல படிபான்னு சொல்றாங்க.காலேஜ் முடிக்கிறதுக்குள்ள ஒரு நாள் கண்டிப்பா போய் பாக்கணும்.பேசணும்.
      இந்த சூர்யாவ வச்சு தான் மத்த,இப்ப தெரியுற எல்லாரையும் தெரியும்.அவன்  gangla தான் சிவா,பிரபானு எல்லோரும்.சிவாவ வச்சு நாகா,நவீன்,ஸ்ரீராம்,ராஜசேகர்
விநோதுன்னு மத்த எல்லோரும்.பிரபாவுக்கும் எனக்கும் ஆகாது.அவன் ஒன்னு சொல்ல நான் ஒன்னு சொல்ல எப்பவும் எதாவது சண்டை நடக்கும்(வாயிலதான்).அது இப்ப வரைக்கும் தொடருது.அதுக்கு ஒரு நிகழ்வு அடித்தளமா அமைந்து போச்சு.
ஒரு நாள் கிளாஸ்ல பிரபா பேசிட்டு இருந்தான் அப்ப மேடம் பாத்துட்டாங்க."படிப்பு முக்கியம் இல்ல,டிசிப்ளின்  தான் முக்கியம்,எப்ப பாத்தாலும் பேச்சுதான்!ஆள பாருனு திட்டிடாங்க.நான் சும்மா இருக்க கூடாது,கிளாஸ் முடிஞ்சு போகும் போது "அறிவு இல்ல
 படிப்பு முக்கியம் இல்ல டிசிப்ளின் தான் முக்கியம்,எப்ப பாத்தாலும் பேச்சு வேறன்னு அதே டயலாக்க சொல்ல "இப்ப எதும் பேசாத பேசாத,மீச வச்சுட்டு வந்து  பேசு பாக்கலாம்னு பொசுக்குனு சொல்லிட்டான்".(அதுக்கும் மீசைக்கும் என்ன தொடர்புனே தெரியல,சரி போன போகுதுன்னு அவன மன்னிச்சு விட்டுட்டேன்).அப்ப இருந்து இப்ப வரைக்கும் தொடருது அந்த சண்டை.

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub