காலேஜ் லைப்ல,காலேஜ்ஜோட சேர்ந்த இன்னொரு அங்கம்,காலேஜ் லைப்ப இன்னும்
சுவையா மாத்துறது ஹாஸ்டல்.ஹாஸ்டலுக்குனே தனி ரூல்ஸ் இருக்கு.பசங்க உருவாக்கியது.இப்படி
தான் இருக்கணும் அப்படீங்கிறதே இருக்ககூடாது.நிஜமாவே வெளிய ரூம் எடுத்து தங்கி
இருக்கிற பசங்கள விட ஹாஸ்டல் பசங்க தான் காலேஜ் லைப்ப நல்லா என்ஜாய்
பண்ணியிருப்பாங்க.பொதுவாவே பசங்க தங்கியிருக்கிற ரூம் எப்படி இருக்கும்னு சொல்ல
தேவயில்ல.அதுவும் ஹாஸ்டல் ரூம்னா chanceசே இல்ல எப்பவுமே ரூம் குப்பையாவே
இருக்கணும் இதுதான் குறிக்கோளாவே எல்லா ரூம் பசங்களும் வச்சிருப்பாங்க.வாரத்துக்கு
ஒரு தடவை கூட்டினாலே அது பெரிய விஷயம்.கண்டது கண்ட இடத்துல இருக்கும்.ஒரு பொருள
ஒரு இடத்துல வச்சுட்டா அது பல நாள் அங்கேயேதான் இருக்கும் அடுத்த தடவ கூட்டுற
வரைக்கும்..எங்க ஹாஸ்டலுக்கு இந்த restrictionனும் கிடையாது.எப்ப வேணும்னாலும்
வரலாம் போலாம்.எந்த ரூம்ல வேணும்னாலும் தங்கலாம்.என்ன வேணும்னாலும் செய்யலாம்.எவனுக்காவது
birthdayனா அவன் அன்னைக்கு செத்தான்.””அடி”யோட” அவன் ஹாஸ்டல மறக்கவே மாட்டான்.நல்லா
தான் இருப்பாங்க திடீர்னு பசங்க எல்லோரும் கத்துவாங்க என்னடான்னு பார்த்த எவனாவது
குளிச்சிகிட்டு இருப்பான் அதுக்குத்தான் கத்தியிருப்பாங்க.போகும் போதும்
கத்தவேண்டியது வரும் போதும் கத்தவேண்டியதுஎதுக்குன்னு எவனுக்கும்
தெரிஞ்சிருக்காது. ஒருத்தன் ரூம்ல இருந்து இன்னொருத்தன் ரூம்னு ஹாஸ்டல் முழுசா ஒரே
படம் வச்சியிருப்பாங்க.அப்புறம் ஒரு ரூம்ல படம் ஒடுச்சுனா அந்த ரூம் அன்னைக்கு
theatreரா மாறியிருக்கும்.mugக்கும் bucketக்கும் ஹாஸ்டல் முழுதும் சுத்துறதுனு
நிறைய.அன்னைக்கு லீவ்னா குளிக்கிறதும் கிடையாது.ரெண்டு நாள் லீவ்னா ரெண்டு நாளும்.தூங்கி
எழுந்தா சாப்பாடு.பிடிச்சா பல்லு துலக்கு இல்லையா அதுவும் இல்ல.எதுக்கும் கவலை
படாத வாழ்க்கை.ரூம்லயே சரக்கு,தம் எல்லாமே.காலேஜ் லைப்ல ஹாஸ்டல் ரெண்டாவது வீடு.dayscholar
பையன்,ஒரு ஹாஸ்டல் பையன அடிச்சுட்டா ஹாஸ்டலே திருப்பி அடிக்க போகும்.
ஹாஸ்டலுக்கு ஆகாத இன்னொரு விஷயம் மெஸ்.ஹாஸ்டல் மெஸ்ல வேலை
செய்யுறவங்களுக்கு தட்ட தேடுறதுதான் பெரிய வேலையா இருக்கும்.சாப்பாடு பிடிக்கிலையா
தட்ட தூக்கி வீசு,வேலை செய்யுறவன பிடிக்கலையா அதுக்கும்.இங்க வந்துதான் வாழ்க்கைல
உள்ளங்கைக்குள் அடங்கும் பூரியையும்,தோசையையும் பாத்தேன்.எக்ஸ்ட்ராவுக்கு பெரிய
பூரித்தான்.இந்த மெஸ்ல இதுவரைக்கும் எந்த strikeகும் நடக்கல.ஹாஸ்டல்ல நான் மிஸ்
பண்ண ஒன்று,இதுவரைக்கும் 2nd floorல உள்ள அந்த பாத்ரூம பாத்தது கூட இல்ல.
No comments:
Post a Comment