Sunday, April 18, 2010

THE RISE OF THE BANNER







அன்றைக்கு COMSEM.அதுக்கு பேனர் அடிக்கிறதுக்கு  சோலைராஜா,
சந்தோஷ் & CO("A" batch and "C" batch), பொறுப்பேற்று செஞ்சுகிட்டிருந்தாங்க.பேனர் வந்து சேர்ந்த போது மணி கிட்டத்தட்ட  அதிகாலை 3க்கு மேல ஆயிடுச்சு.IT மூனு பேட்ச்சும் சேர்ந்துதான் பேனர் அடிச்சாங்க.ஆனா அதுல அதிகமா இருந்தது B-Batch பசங்க.
எப்படியோ கஷ்டப்பட்டு அந்த ரீப்பர் கட்டைல,பேனர அடிச்சதே பெரிய விஷயம்.அத நிறுத்தும் போது கிட்டத்தட்ட 7 மணி ஆயிடிச்சு.எங்க விழுந்திடுமோனு பயந்துட்டு,அதுவும் இல்லாமல் HOD வாக்கிங் வரதுக்குள்ள அத நிக்க வச்சுடணும்னு கஷ்டப்பட்டு
செஞ்சாங்க.எப்படியோ வச்சுடோம்,சொல்லி வச்ச மாதிரி அடுத்த நிமிஷம் HOD
அங்க வந்துட்டார்.வழக்கமா ஓடுற மாதிரி ஓடிடுவாங்கலோனு பாத்தா,நல்ல வேளை எல்லோரும் ஓடாம நின்னுட்டு இருந்தாங்க.
   "எவன்டா பேனர் வைக்க பெர்மிஷன் கொடுத்தது"
   "எவன கேட்டு லுங்கிய மடிச்சு கட்டியிருக்க"-HOD
 நாகாவ கூப்பிட்டு எதோ கேட்டார்.

கத்திகிட்டு பசங்கெல்லாம் ஹாஸ்டல் கிளம்பிட்டாங்க.
கொஞ்ச நேரத்துல ஹாஸ்டலுக்கு,4 ஸ்டாப்ஸ் வந்துட்டாங்க.எவனும்
கண்டுக்கலயாம்.திரும்பவும் போய் பாக்கும்போது அங்க பேனர் இல்ல.
'c" பேட்ச் பசங்கள வச்சு கிழிச்சி,கொண்டுபோய்டாங்க.

"எங்களுக்கே பாடம் சொல்லிதரீங்களா,என்ன பண்றோம் பாருங்க."
   "you teach us the rules and we we will teach you how
   to break it."
    அதுல இருந்த இந்த இரண்டு வரியை தான் காரணாம சொல்றாங்க.
"சொல்லி இருந்தா நாங்களே வைட்னர் இல்லாட்டி செல்லோடேப் வச்சு
மறச்சிருப்போமே,அதுக்குள கிழிச்சிடாங்களேனு பசங்க ஒரு பக்கம்."

"வச்சதும் வச்சீங்க,ஒரு நல்ல wordings போட தெரியல.நல்ல  பேனரா இருந்திருந்தா நாங்களே permission கொடுத்திருப்போமே!". -KSK


அத கேக்க போகும் போது,டீன் வந்து,
             "நம்ம Department function நீங்க
             தான் செய்யணும்,கிழிச்சதுக்காக comsemம நிறுத்திடுவோமா,சொல்லுங்க
             வந்திருக்கிற கெஸ்ட் எனக்கு நல்லா தெரிஞ்சவர்,இது போல பிரச்சனனு சொன்னா போய்டுவார்.ஆனா உங்களால  நின்னுடுச்சுனு....."

அப்புறம் incharge,HODனு பேசி ஒரு வழியா அந்த வரிய மட்டும் மறைச்சு
திரும்பவும் அத நிக்க வைக்கணும்னு,கிழிஞ்ச பேனர வாங்கி,ஒட்டி
திரும்பவும் பேனர ஏத்தும் போது மணி 1, கிட்டதட்ட.
அந்த பேனர திரும்பவும் நிக்க வச்ச போது வந்துச்சு பாருங்க சத்தம்..
அதுக்காக தான் இத்தனையும்.....

என்ன இருந்தாலும் அதுல இருந்த அந்த ரெண்டு வரிகள யாரும் ஏத்துக்க மாட்டாங்க.தப்புதான்.

இந்த கலவரத்துல,ஸ்ரீராம் பண்ண paper presentationன பாக்க
முடியாம போய்டுச்சு.
























































































No comments:

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub