Thursday, April 1, 2010

எல்லோரும் எழுதுவோம்.

பல  பேர் ஸ்லாம் புக் கொடுத்து,எழுத சொல்றாங்க.
கடிதத்துக்கு ஏற்பட்ட நிலைம தான் இப்ப ஸ்லாம் புக்குக்கு.
எதுக்குடா ஸ்லாம் புக் எழுதணும்."உன்னை எனக்கு இத்தனை
வருசமா தெரியும்,நாம இப்படி பழகுனோம்,அங்க போனோம்,
இங்க போனோம்".இத தான் எழுதபோறோம்.இது எனக்கு தெரியாதா.
இத வேற எழுதணுமா.அதுவுமில்லாமல் இன்டர்நெட்,மெயில்,பேஸ்புக்னு
வந்துடுச்சு.அதுலயே chat பண்ணிக்கலாம்,மெயில் பண்ணிக்கலாம்.
இத விட போன் வேற இருக்கு,தோன்ற நேரத்துல கால் பண்ணிக்கலாம்.
இது 21st centuryடா இன்னும் ஸ்லாம் புக் எழுதிட்டு இருக்கணுமா
என்ன?.இந்த நோட்ல எழுதுனா தான் நீ என்ன ஞாபகம் வச்சுக்குவனா அப்படி ஒரு நட்பே தேவ இல்லை.நான் உன்னை நெஞ்சில வச்சி இருக்கேன்.
ஒரு ஸலாம் புக் எழுத சொன்னா எப்பா, எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க.
என்ன தான் technology வளந்திருந்தாலும் நம்ம கை பட எழுதனத நாளைக்கு திறந்து பாக்கும் போது வரும் அந்த சந்தோசம் மெயில்லையோ  இல்லை மத்ததிலோ வராது.இப்பவே ஒரு கால் பண்றதுல,இதுல காலேஜ் முடிஞ்சு மெசேஜ்,சாட் எல்லாம் சான்ஸ்சே இல்ல.எழுதருதுக்கு சோம்பேறித்தனம்  பட்டே சில பேர் எழுதறதில்ல. கிளாஸ்ல  எல்லோர்கிட்டேயும் நாம க்ளோஸ்சா இருக்கிறதில்ல.அந்த பசங்கள எப்படி ஞாபகம் வச்சிபாங்க.
தோன்ற கவிதையோ கன்றாவியோ,இல்ல கோபமோ கதையோ, பொய்யோ  + உங்க பிறந்தநாள் தேதி எழுத எவ்ளோ நேரம் ஆகபோகுது.
நாளைக்கு அந்த புக்க பாக்கும்போது மட்டும் தான், சில பேருக்கு இப்படி ஒருத்தன் இருந்தானானு   தோணும்.அதனால யார் கேட்டாலும் எழுதுங்க.நானும் எழுதுவேன். 

No comments:

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub