எல்லோரும் ப்ராஜெக்ட் வைவாவுக்கு தயார் ஆயிட்டிருந்தாங்க.எனக்கு அந்த கவலை இல்ல ஏன்னா ராஜசேகரும் ஸ்ரீராமும் அத பார்த்துக்கிட்டாங்க, பார்த்துகிட்டிருகாங்க.எதையோ இழந்த மாதிரி,வழக்கமா கிளாஸ்க்கு போறது தடைபட்டதாலோ,இல்ல இன்னும் ரெண்டுநாள்ல எல்லாமே முடிஞ்சிடுங்கிற அந்த உணர்வோ தெரியல.
எங்க ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும் போது இது முடியுமானு doubtடா இருந்துச்சு.
நாங்களும் எத்தனையோ topic கொண்டு போய் மேடம்கிட்ட காண்பிச்சோம்.
அதுல செய்,இதுல செய்னு இமேஜ் சம்பந்தப்பட்ட ப்ராஜெக்ட் செய்யுங்கனு
சொல்லாமல் சொல்லிட்டாங்க.Topic கொடுக்கவே லேட்டானதுனால
நாங்க ஒரு ஒரே ஒரு preview மட்டும் தான் எடுத்தோம்.அதுவும் ஸ்ரீராம்தான்
எடுத்தான்.
எங்களுக்கு அந்த டைம்ல help பண்ண சார்,ஆனந்த நடராஜன்.
அவர் இல்லனா இத முடிச்சிருக்கவே முடியாது.அவர் இங்கயே M.E.படிக்கிறார்.அவருக்கு நன்றி சொல்லியே ஆகணும்.
அவருக்கு help பண்ணது ராஜசேகரும்,ஸ்ரீராமும்.நானும் சிவாவும்
ipl match பாக்க போய்டுவோம்.record போடும் போது பல நாள் சாபிடாம
கூட(ஒரு நாள்) சுத்துனது ராஜசேகர்.அடுத்த நன்றி இவங்களுக்கு.
இந்த topic எடுக்க காரணமா இருந்த அருள்செல்வி மேடமுக்கு 'பெரிய"
தேங்க்ஸ்.எதோ அரைகுறையா சொல்லி வெற்றிகரமாக முடிச்சிட்டோம்.

No comments:
Post a Comment