Sunday, April 11, 2010

கார்த்தி வீட்டு விருந்து.

"எத்தன chicken கேட்டாலும் வைக்கிறாங்க.நானே ரெண்டு leg-piece சாப்பிட்டேன்".
கார்த்தி வீட்டு விருந்துக்கு போயிட்டு வந்ததும் வராததுமா, ஒரே பூரிப்பா
சொல்றான்.

"ஒரு 80 பேர் வந்திருப்பாங்க"னு mugக தூக்கிட்டு toilet போறான்.
பசங்கள பத்தி நல்லதாவே எழுத மாட்டியா,toilet போனத பத்தி
 எல்லாம் எழுதற அவங்கள பத்தின நல்ல விசயத்த எழுத மாட்டியா.நான் என்ன செய்யுறது இப்ப கூட நேர அங்கதான் போறான்,இவன் மட்டும் இல்ல மத்தவங்களும் தான்.அது ஒரு திருவிழா விருந்து போல இருந்துச்சு.



"முதல்ல ஒரு leg-piece வச்சாங்க,சாப்பிட்டுடேன்.இன்னொன்னு வேணுமான்னு 
கேட்டாங்க.நிறைய பேரு இருக்காங்கனு வேணான்னு சொல்லிட்டேன். 
பார்த்த Rajsekar இன்னொன்னு வாங்கிட்டான்.விடுவனா! நானும் இன்னொன்னு வாங்கிட்டேன்."


"எதோ ரெண்டு தடவ சாப்பிட்டோம்னு கொஞ்சம் தயிர் வாங்குனா,
""என்ன ராஜசேகர் dietனு சொன்னீங்க"",கேக்குறான்.அவன் சாப்பிடுவானு
பாத்த என்ன பாத்து சாப்பிட்டுட்டு இருக்கான்."
அது என்னமோ தெரியல ராஜசேகர் dietல இருக்கலாம்னு முடிவு பண்ணி 
ஒரு சில நாட்களுக்குள்ளே ஏதாவது ஒரு விருந்து வந்துடுது.
அதுக்காக சாப்பிடாம இருக்க முடியுமா.அப்போதைக்கு மட்டும் dietட 
cancel பண்ணிட வேண்டியது தான். 

அடுத்த விருந்து இளா வீட்டுல திங்கக்கிழம,புதன்கிழமை நம்ம வேலு வீட்டுல.





No comments:

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub