Friday, January 29, 2010

கைப்பிள்ளைங்களா...!

எல்லோராலையும் சிரிக்கவே முடியாது அவங்கபோல.எதுக்கெடுத்தாலும் சிரிப்பாங்க . சில நேரம் ஏன் சிரிப்பாங்கனும் தெரியாது.சிரிக்கவே காலேஜ் வந்திருக்காங்க போல. கெக்க புக்கனு சத்தம்  வந்தா அவங்கதான்.கைதட்டிபாங்க. அவங்க gangla   எவனாவது ஒருத்தன் மத்தவன ஒட்டுனா  போதும் சொல்லிவச்ச மாதிரி எல்லோரும் ஒன்னா சிரிப்பாங்க.அவங்க கேங்கே பொண்ணுகளோட கவனத்த ஈர்க்தான்,இந்த கெக்க புக்க எல்லாம் பண்ணுவாங்க.
      
          
           ஏன்டா நண்பா இப்படி சத்தமா சிரிகிறீங்க?
          silenta சிரிச்சா யாருக்கும் கேட்காதுல!
          (கிளாஸ்க்கே  கேட்கனுமாம் )
          என்டா இப்படி தேவை இல்லாம   சிரிகிறீங்க?
           சிரிச்சா ஆயுள் கூடும்!
           ஏன் குரூப்பா  சிரிகிறீங்க?
           சந்தோசத்த  பகிர்ந்துகிறோம்!
           ஏன் பொண்ணுகள concentrate பண்ணி சிரிகிறீங்க?
           கேள்வி தவறு!
           ஏன் மத்தவங்க பீல் பண்ண மாட்டாங்களா?
            மத்தவங்க பீல் பண்ணற அளவுக்கு போகமாட்டோம்!
மணி உன் பேரு வெறும் பாட்டில்லா  இல்ல பீர் பாட்டில்லாங்கிறது புண்படுதாதா! (நானும் பல வாங்கி இருக்கேன்,அத சொல்லி மாளாது)
அவங்க மனசுல நாமதான் இந்த கிளாஸ்ல கெத்து அப்படிங்கற நெனபும்  கொஞ்சம்.
நெஜமாவே அது ஒரு காமடி குரூப் தான்.(ஆமா அந்த சங்கத்துல யாரு தலைவர்,இந்த சங்கத்துக்கு இன்னொரு பேரு கைபிள்ளை சங்கமாம் அப்படியா)

நவீன்னு ஒரு ஜீவன்!எதுக்கும் கவலை படமாட்டானு சொல்றாங்க.கிட்டத்தட்ட அப்படிதான்.இடம் பொருள் ஏவல் இதுவெல்லாம் என்னனே தெரியாது.அவன் ரேர்ரா  எழுதுன ஒரு கவிதை
           பூக்கள் பூப்பது  பெண்கள்
                                     வைப்பதற்காக!
           ஆனால் பெண்ணே
                                      நீ பூத்தது எனக்கு  மட்டும்
          தான் (என்று) நினைத்துகொண்டு
                                     இருந்தேன் !
          ஆனால் உன்னை இன்னொருவன்
                                       பறித்துவிட்டான் !
          இப்போது நான் என்ன
                                       செய்ய?
          தற்கொலை  செய்வதா?
                                         இல்லை
         உயிரோடு இருந்து கொண்டே
                                         இறப்பதா!

இப்பதான் புரியுது.நமக்கும் ஒரு பொண்ணு மாட்ட மாட்டேன்ங்குதுனு அடிக்கடி சொல்லுவான்.
(ஆமா இந்த கவிதை எந்த பா னு எல்லாம் எனக்கு  தெரியாது .அவன்  கிட்ட கேட்டுகோங்க.)

என்னை  போட்டோவுல  பார்த்தா என்னகே பிடிக்க மாட்டேங்குது.அதனால தான் போட்டோ எடுத்துக்க மாட்டேன்ங்றேன் (எவன் மூஞ்சிதான் போட்டோவுல நல்லா தெரியுது).
இது ஒரு அப்பாவி ஜீவன்.
இப்ப நீங்க படிக்கிறது 6 th வெர்சன்.நான் இன்னும்  ரெண்டு வருடம்    கழிச்சு 8 th வெர்சன் உங்கள விட அட்வான்ஸா ஒண்ணா படிப்பேன்  (ஆமா  இன்னும் ரெண்டு வருஷம்  கழிச்சு 10 th வெர்சன் படிக்கிலாமே.அப்படியே 12 th ,13 th னு கடைசி வெர்சன் படிச்சுகிலாம் ..,ஆலபாரு)    


  
        
        
            
 

            
        
      

Friday, January 22, 2010

ப்ரீ டைம் (தமிழ்ல வெட்டி வேள )

"என்னடா  கிளாஸ்  இல்லையா?" 
"ஏன்டா கேக்குற?"
"மெசேஜ்ஜா  வந்துகிட்டிருக்கு!"
"கிளாஸ் இருக்கிறதாலதாண்டா  அனுப்புறேன்! வெட்டியா  உட்காரமுடியல! பத்தாயிரம் மெசேஜ் ஜ காலி பண்ணண்ணும்மில்ல!"(MESSAGE CARD போட்டிருகானாம்) .
எங்களுக்கும் என்ன பண்றதுனு தெரியல வாத்தியாருக்கும்  என்ன பண்றதுன்னு தெரியல.
எவ்ளோ நேரம் தான் ஒருத்தர் மூஞ்ச  ஒருத்தர் பாக்குறது?
"இப்படி ஏதாவது பன்னாதாண்ட மாப்ள டைம் போகுதுங்றான்!.
அவன் சொல்றதிலையும் தப்பு இல்ல,இதே ரூம்ல இருந்தா கேம்ஸ் விளையாடுவோம்
நெட்ல எதாவது நோண்டுவோம்,புக்ஸ் (சப்ஜெக்ட்னு  தப்பா நினைக்க வேண்டாம்,ஆனந்த விகடன்,குமுதம் அது மாதிரி.)இவ்ளோ விஷயம் பண்றவன சும்மா வாத்தியாரு வாயவே பாத்துட்டு உட்காருன்னா  எப்படி உட்காரமுடியும் சொல்லுங்க.
எதோ ஒரு  கிளாஸ்னா   ரெண்டு  கிளாஸ்னா பரவால சும்மா உட்காரலாம். செமஸ்டர்ரே  சும்மா உட்காரனும்னா என்ன பண்ணமுடியும்! எப்படி ஏதாவது செஞ்சுதானே   ஆகணும்.பாவம் அந்த அப்பாவி வாத்தியார்.கிளாஸ்ல வந்து முன்னாடி ஒரு பத்து நிமிஷம்,பின்னாடி ஒரு பத்து நிமிஷம் வெறுமனே பசங்க பேசுறத பார்த்துட்டு இருப்பார்.வேற என்ன பண்ண முடியும்,போன வருஷம் வரைக்கும் அவரே ஸ்டுடென்டா   தானே இருந்தார்.ஒரு ஸ்டுடென்ட்டோட கஷ்டம் இன்னொரு ஸ்டுடென்ட்டுக்கு தெரியாதா என்ன(ME பண்றாங்க அததான்).
இதெல்லாம் கூட பரவாயில்ல ப்ராஜெக்ட் லாப்னு ஒன்னு,ரெண்டு மணிநேரம் என்ன பண்றது தெரியாம அவன் அவன் முழிப்பான்.இதுல வாரத்திற்கு ரெண்டு.திடீர்னு ஒரு நாள் ஒரு யோசனை.எத்தன லேப் அட்டென் பண்ணியிருப்போம்,என்ன பண்ணோம்னு  யோசிச்சா என்ன செஞ்சனே  தெரியல.அடுத்த லேப்ல அந்த ரெண்டு மணி நேரத்துல என்ன பண்றனு நோட் பண்ணனும் முடிவு  பண்ணேன்.லேபு சாயுங்காலம் 3.45 க்கு. லேப்ல போயி மறந்துட்டேன்.4.45 க்கு தான் ஞாபகமே வந்துச்சு.சரி விடுங்க 4 .45 ல இருந்தே சொல்றேன். பக்கத்துல சிவா,இன்னொரு சிவா,ஹுசைனி ,எழில்.
இதுவும் ஒரு வெட்டி வேல தான் இருந்தாலும்  சொல்றேன்.
4 .45 -ஜல்லிக்கட்டு பாலமேடு 
4 .53 -ரெட்டுடு(அது ஒரு வெப்சைட்)
4 .54 -மிட்டாய்
4 .54 -மொக்கை மணி (யாருன்னு சொல்ல மாட்டேனே )
4 .54 -டைம்மே  போகமாட்டேன்ங்குதுடா (இது SRK )
(ஓர நிமுசத்துல பல விஷயம் -time is gold பா)
4 .55 - N -73 என்னாச்சு (ஹுசைனியோடது)
4 .55 -நான் எழுதுறத பாத்துட்டாங்க
4 .56 -கொழுசுகட ஓரதுள்ள (பாடு வேணுமாம் சிவாவுக்கு,இப்பவரைக்கும் எடுத்து கொடுக்கல,அது வேற விஷயம்)
4 .57 -சொன்ன ஒன்னு கூட எடுத்து தரமாட்டேன்ங்குறான் இது சிவா  (நெட் ல )
4 .58 -வோடபோனே பத்தி (எல்லா Advertisementum நல்லா இருக்கு) 
4 .59 -அவனோட ஆள பத்தி (அது ஒரு சோக கத)
5 .00 -நான் என்ன எழுதறேன்னு சிவா படிச்சான்
(ரெண்டுல எந்த சிவா,எனக்கே  confusiona இருக்கு)  
5 .01 -ஆமா  இந்த கிளாஸ்ல   எந்த பொண்ண உனக்கு பிடுக்கும் (ம்ம்ம்......)
5 .03 -ஒரு வாத்தியார  பத்தி
5 .04 -பாட்டுக்கு பாட்டு வச்சுகலாமா(இத மட்டும் விட வே மாட்டங்களா ரொம்ப ஓல்ட் பா)
5 .05 -LCD MONITOR ( உள்ள என்னமோ இருக்கு தெரிஞ்சா சொல்லுங்க )
5 .08 -attendence எடுத்தாங்க(ஒரு கொஞ்ச நேரம் பேச மாட்டாங்க தப்பிச்சேன்)
5 .18 -சட்ட கல்லூரி  சண்டை (ரொம்ப தேவை மெஸ்சுல)
5 .22 -நீ ஒரு லூசு (நான் தான்.)
5 .23 - (வந்துட்டானா) அண்ணாமலை யுனிவர்சிட்டில நான் lecturera சேருவேன்-நம்ம சிவாவேதான்(SRK )
5 .24 -சிவாவோட காஸ்ட்லியான வாட்ச பத்தி (சத்தியம்மா ரெண்டு 1000 US டாலர்)
5 .26 -போலி சாம்மியர   பத்தி (VERY HOT TOPIC இல்லையா கட்டாயம் இது discussionla இருந்தே ஆகணும்)
5 .30 -பழைய நினைவுகள் (1 'st YEAR FRIENDSHIP )
5 .35 -வளைச்சு நம்ம கிட்ட வரணும் இல்ல (என்ன  பத்திதான்)
5 .37 -நல்லா வேள 6 .00 மணி கிளாஸ்ச 5 .37கே விட்டாங்களே
இல்லாட்டி நான் செத்து இருப்பேன்.(எவ்ளோ டைப் பண்ணுறது)

ஆக மொத்ததில நாதான் இந்த வெட்டி வேள பாத்திருக்கேன்.அவங்கெல்லாம் நிமசதுக்கு
நாலு விசயும்னு டைம வேஸ்ட் பண்ணாம பேசி இருகாங்க. 

(பின் குறிப்பு:இந்த ப்ளாக்கின்  மேல சத்தியமாக மேல குறிபிட்ட அனைத்தும் உண்மையே,நம்புங்க அவர்களே   சாட்சி)

Wednesday, January 20, 2010

புத்தூர் விருந்து

பிறந்தநாள் கொண்டாட்டம் முடியும் போது ரொம்ப நேரம் ஆயிடுச்சு.அதுவும் நான்  எந்திருகும்போது மணி ஒன்பதை தாண்டிரிச்சு.ரெண்டு கிளாஸ் வேற போயிடிச்சு.மதியம் வேற treat . அதுக்கு  வேற ஒரு ரெண்டு கிளாஸ் கட் ஆகுமுன்னு வருத்தம்.என்ன செய்யுருது  அத பார்த்த treat  போயுடுமே.இந்த மாதிரி விசயத்துல  எல்லாம் compromise கிடையாது.ஆனாலும்  நவீனும் வினோத்தும் எந்திரிச்சிட்டாங்க.தூக்கத்தில  கிளாஸ்க்கு  போனேன் .தூங்கிட்டா  கிளாஸ்  கட் ஆகிடும்.அப்புறம் ட்ரீட்டுக்கு போகமுடியாதே .
விஜயோட  பிறந்தநாளுக்கு காலேஜ் லீவ்.அதனால் நாகாவோட விஜயும்  சேர்ந்து  ட்ரீட் கொடுத்தான் .இதுல ரெண்டு ஜீவன் மட்டும் மிஸ்ஸிங் .ஒன்னு ஸ்ரீராம் இன்னொன்னு ராஜசேகர்.ரெண்டு பெரும் ப்ராஜெக்ட் விசயம்மா (படிப்பு) சென்னை போய்டாங்க.புத்தூர் சாப்பாடு இங்க கொஞ்சம் பாமெஸ்.ஸ்டாலின் இந்த பக்கம் வந்தார்னா அங்க கண்டிப்பா சாப்பிட்டு தான்  கிளம்புவாராம்,ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க.ஆ வூ நு சொல்லுவாங்க.மொத்தம் 16 பேர் போனோம்.நான் பெரிய அளவுல பிளான் பண்ணி இருந்தேன்.அத இதனு நெறைய(சாப்பிடனும்னு).நேத்து வேற இல்லாம இன்னைக்கும் நாகாவுக்கு கிப்ட் கொடுக்கிறேன்னு கடிச்சு வச்சுடானம் நவீனு. அங்க போன அந்த புத்தூர் சாப்பாட சாப்பிட ஏற்கனவே பல பேர் தொப்பைய காயபோட்டுட்டு வந்திருந்தாங்க.ஒரு
கியுவே வெளிய நின்னுட்டு இருந்துச்சு.நாகெல்லாம் எம்மாத்திரம்.அந்த கடைல   மீதம்
ஆகுற சாப்பாட்டை  எல்லாம் owner தான் சாப்பிடுவார் போல அவ்ளோ  பெருசு அவரோட வயிறு.எல்லாரும் ஒன்னா சாப்பிட முடியாது அதனால ரெண்டு மூணு பேரா
உட்காருங்கனு சாப்பிட்டுட்டு இருந்த இடத்துல்ல  நின்னுட்டு  இருந்தோம்.நானு சிவா ராம் மூனு பேரும்,ஒரு மூனு  பேருகிட்ட நின்னுட்டு இருந்தோம்(முடிசிடுவாங்கனு  நம்பி).மத்தவங்க எல்லாம் வெளிய  நின்னுட்டு இருந்தாங்க,காலியாக காலியாக வந்து சாபிட்டுகல்லாம்னு.சாப்பிட்டுட்டு இருக்கிறவங்க கிட்ட வைடிங்க்ல கொஞ்ச பேரு வேற.
போய் சேர்ந்தது   வேற லேட்டு.waiting ஒரு பக்கம் பசி ஒரு பக்கம்.நாங்க  நின்னுட்டு இருந்த எடத்துல ரெண்டு பேரு எழுந்துட்டாங்க.சிவாவும் ராமும் உட்காந்துடாங்க. இனொரு ஆள் எழுரவரைக்கும் நான் நின்னுட்டு இருந்தேன்.சிவாவும் ராமும் ரெண்டு ரவுண்டு முடிச்சுட்டாங்க.வெளிய நின்னுட்டு இருந்த வினோத் , நாகாவெல்லாம் உட்காந்துடாங்க.நான் இன்னும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்  அவன் எந்திருப்பானு .
சிவாவுக்கு வந்த சிக்கன்னு ,இரானு நின்னுட்டே சாப்பிட்டேன் .அர பாட்டில் தண்ணி வேற குடிச்சுட்டேன்.ஊ ஹும் எந்திரிக்கவே இல்லயே.அப்புறம் என்ன சாப்பிடுற ஆசை போயிடிச்சு.ஒரு வழியா எந்திரிச்சான்.அப்புறம் என்ன நானும் ஒரே தடவ சாதம் சிக்கன் குழம்போட முடிச்சுகிட்டேன்.அவனால நாகாவோட பர்த்டே ட்ரீட் எனக்கு கொஞ்சம் disappointment.என்ன ஒரு ஒன்ற plate இறா மட்டும் சாப்பிட்டேன்.

பின் குறிப்பு:இத எழுதும்  போது ஒருத்தன்  போட்டான் ஒரு மொக்கை எப்பா .....
அதவும் ஒரு கல்....... ணம் ஆக போற ஒரு பொண்ணோட ராமா ....

Tuesday, January 19, 2010

நாகா பிறந்தநாள் (மோசமான நாள்)

 20/1 /2010  நாகவோட 23 rd பிறந்தநாள். கொண்டாடத்த பத்தி ,
 
ஸ்ரீராம் :
                  இந்த பிறந்த நாள் கொண்டாட்டதுல  மட்டும் தான் அடி வாங்காமல்?? (நிறைய வாங்கி இருக்கான் போல) அடி கொடுதேன் . நான் நாகாவை நன்றாக அடித்தேன்(என்ன கட்டுரையா?). என்ன வருத்தம் என்றால் கேக்  வெட்டும் போது நான் இல்லை .  

சிவா:
   நாகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் அடிச்சா தாங்கமாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட(யப்பா முடியல!) .நாம் சேர்த்து கொண்டாடும் கடைசி பிறந்தநாள்(நல்ல வேள மத்தவங்க தப்பிசாங்க).நாயே  இன்னைக்கு மட்டும் 2  மணிநேரம் தண்ணியில ஊறியிருக்க. இனிமே 6 மாசம் குளிக்க மாட்ட(நிஜமா) .உன் வாழ்கையில வெற்றி பெற வாழ்த்துக்கள்.நான் இல்லை என்றாலும் என் இதயம் உன்னோடு இருக்கும்(எப்பிடி).

வினோத்:
ஹாய் HIV.முதன் முதலில் உலகத்திலேயே மெழுகு வர்த்திக்கு  பதில் சிகரேட்டேவச்சு  கேக் வெட்டுன HIV நீதாண்டா .

ராம்:
 என்னோட பிறந்தநாளுக்கு என்ன எப்படி அடிச்சான்னு எனக்கு தெரியும் ஆனா அவனோட நல்ல நேரம் எனக்கு தலைவலி.(இப்படி சொல்லி நான் தப்பிச்சிகிட்டேன்.இல்லனா என்னாகும், இன்னொரு பர்த்டே கொண்டாடி இருப்பாங்க) 
சுரேஷ் :
 நான் ரொம்ப நாளா ப்ளாக் எழுதனும்னு ஆசை. தேங்க்ஸ் டு நாகா.பெரிய அளவுல இல்லனாலும் சிம்ப்ளா.எப்படியும் ஹாஸ்டல  ஒருத்தருக்கு பிறந்தநாள்னா அன்னைக்கு நைட் ரணகளமாஇருக்கும்.அதுவும் நாகாவுக்குனா சொல்லவே வேண்டாம்.இத நான் எழுதும் போது கிட்டத்தட்ட கொண்டாட்டம் முடிவுக்கு வந்துருச்சு.முதல நாகாவுக்கு என்னோட வருத்தத்த சொல்லிகிறேன்.அடினா அடி கொஞ்சநஞ்சம் இல்ல (நான் அடிகில). இத கொண்டாட்டம்னு  சொல்ல மாட்டேன்.பல நாள் வெறியோட காத்திருந்த பல பேர் அ(இ)ன்னைக்கு தீர்த்துகிட்டாங்க .
சிவாவோட கண்ணுல எதோ ஒன்னு தெரிஞ்சது.நான் கொண்டாடுனாலும் இப்படி தானே அடிப்பான். பார்த்துகிட்டேன்.
ஸ்ரீராம்,இந்த குழந்தையுமா அடிக்குது.எல்லாம் நேரம்.
அந்த வீடியோவுல வினோத் ஒதச்சது என்னோட கண்ணுல இருக்கு.எல்லாமே REVENGETHAAN கொடுத்தத வாங்க வேண்டாம்.எதோ ஒரு கோபத்துல கொண்டாட்டத்துல கலந்துக்காம தூங்கிட்டு  இருந்தார்  ராஜசேகர். நவீன் பண்ண வேலை.என்ன நினைத்தாரோ ஒரு பெல்ட்ட எடுத்து வந்து சாத்துசாத்துனு சாத்திட்டான்.வேற எதோ ஒரு கோபம் போல.இதுல முக்கியமான ஒரு ஆளு மிஸ்ஸிங் அது விஜய்.அதனால விஜய் தப்பிச்சானா  இல்ல நாகா தப்பிச்சானா தெரியல.ஆனாலும் விஜய்க்கு  தனியா இருக்கு.
இந்த மாதிரி ஒரு பிறந்தநாளும் வேணா ,நினைவுகளும் வேணா .
இது எல்லாம் முடிஞ்ச அப்புறம் சொல்றாங்க "WISH YOU HAPPY BIRTHDAY ".
எப்படியோ  நாகாவுக்கு என்னோட WISHES .
(பின் குறிப்பு:எனக்கும் கொண்டாடுராங்கலாம்,எப்பா ஆள விடுங்க)
ராஜசேகர்:
வாழ்க வளமுடன்.

நவீன் குமார்:  அட   என்னடா இது இவ்ளோ  செஞ்சும் ஒருத்தனும் வரல.. என் மாப்ள மட்டும் தான் அடிச்சான்.மாப்ள நீ நல்லா  அடிச்ச.நாகாவுக்கு அடிச்சதுகூட வலிகில மாப்ள . மாப்ள  பசங்க வராதது தான் வலிக்குதாம் மாப்ள.   
 (பல நாள் கழிச்சு விஜய் கொடுத்த வாக்கு மூலம் (பயந்துட்டு)
விஜய்: டேய் கருவாயா அன்னைக்கு எங்க பசங்க என்ன M.G.R. திட்டுக்கு கூட்டிட்டு போயி உத ....... உத .... னு.......உதைச்சு  டாங்க........அதநால தான் நீ அம்மணமா அடி வாங்கும் போது........ஓடி பக்கத்து ரூம்ல,ஒழிஞ்சு கிட்டு நீ அடி வாங்குனத ரசிச்சேன்.

 









 

 

 









 

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub