பிறந்தநாள் கொண்டாட்டம் முடியும் போது ரொம்ப நேரம் ஆயிடுச்சு.அதுவும் நான் எந்திருகும்போது மணி ஒன்பதை தாண்டிரிச்சு.ரெண்டு கிளாஸ் வேற போயிடிச்சு.மதியம் வேற treat . அதுக்கு வேற ஒரு ரெண்டு கிளாஸ் கட் ஆகுமுன்னு வருத்தம்.என்ன செய்யுருது அத பார்த்த treat போயுடுமே.இந்த மாதிரி விசயத்துல எல்லாம் compromise கிடையாது.ஆனாலும் நவீனும் வினோத்தும் எந்திரிச்சிட்டாங்க.தூக்கத்தில கிளாஸ்க்கு போனேன் .தூங்கிட்டா கிளாஸ் கட் ஆகிடும்.அப்புறம் ட்ரீட்டுக்கு போகமுடியாதே .
விஜயோட பிறந்தநாளுக்கு காலேஜ் லீவ்.அதனால் நாகாவோட விஜயும் சேர்ந்து ட்ரீட் கொடுத்தான் .இதுல ரெண்டு ஜீவன் மட்டும் மிஸ்ஸிங் .ஒன்னு ஸ்ரீராம் இன்னொன்னு ராஜசேகர்.ரெண்டு பெரும் ப்ராஜெக்ட் விசயம்மா (படிப்பு) சென்னை போய்டாங்க.புத்தூர் சாப்பாடு இங்க கொஞ்சம் பாமெஸ்.ஸ்டாலின் இந்த பக்கம் வந்தார்னா அங்க கண்டிப்பா சாப்பிட்டு தான் கிளம்புவாராம்,ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க.ஆ வூ நு சொல்லுவாங்க.மொத்தம் 16 பேர் போனோம்.நான் பெரிய அளவுல பிளான் பண்ணி இருந்தேன்.அத இதனு நெறைய(சாப்பிடனும்னு).நேத்து வேற இல்லாம இன்னைக்கும் நாகாவுக்கு கிப்ட் கொடுக்கிறேன்னு கடிச்சு வச்சுடானம் நவீனு. அங்க போன அந்த புத்தூர் சாப்பாட சாப்பிட ஏற்கனவே பல பேர் தொப்பைய காயபோட்டுட்டு வந்திருந்தாங்க.ஒரு
கியுவே வெளிய நின்னுட்டு இருந்துச்சு.நாகெல்லாம் எம்மாத்திரம்.அந்த கடைல மீதம்
ஆகுற சாப்பாட்டை எல்லாம் owner தான் சாப்பிடுவார் போல அவ்ளோ பெருசு அவரோட வயிறு.எல்லாரும் ஒன்னா சாப்பிட முடியாது அதனால ரெண்டு மூணு பேரா
உட்காருங்கனு சாப்பிட்டுட்டு இருந்த இடத்துல்ல நின்னுட்டு இருந்தோம்.நானு சிவா ராம் மூனு பேரும்,ஒரு மூனு பேருகிட்ட நின்னுட்டு இருந்தோம்(முடிசிடுவாங்கனு நம்பி).மத்தவங்க எல்லாம் வெளிய நின்னுட்டு இருந்தாங்க,காலியாக காலியாக வந்து சாபிட்டுகல்லாம்னு.சாப்பிட்டுட்டு இருக்கிறவங்க கிட்ட வைடிங்க்ல கொஞ்ச பேரு வேற.
போய் சேர்ந்தது வேற லேட்டு.waiting ஒரு பக்கம் பசி ஒரு பக்கம்.நாங்க நின்னுட்டு இருந்த எடத்துல ரெண்டு பேரு எழுந்துட்டாங்க.சிவாவும் ராமும் உட்காந்துடாங்க. இனொரு ஆள் எழுரவரைக்கும் நான் நின்னுட்டு இருந்தேன்.சிவாவும் ராமும் ரெண்டு ரவுண்டு முடிச்சுட்டாங்க.வெளிய நின்னுட்டு இருந்த வினோத் , நாகாவெல்லாம் உட்காந்துடாங்க.நான் இன்னும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அவன் எந்திருப்பானு .
சிவாவுக்கு வந்த சிக்கன்னு ,இரானு நின்னுட்டே சாப்பிட்டேன் .அர பாட்டில் தண்ணி வேற குடிச்சுட்டேன்.ஊ ஹும் எந்திரிக்கவே இல்லயே.அப்புறம் என்ன சாப்பிடுற ஆசை போயிடிச்சு.ஒரு வழியா எந்திரிச்சான்.அப்புறம் என்ன நானும் ஒரே தடவ சாதம் சிக்கன் குழம்போட முடிச்சுகிட்டேன்.அவனால நாகாவோட பர்த்டே ட்ரீட் எனக்கு கொஞ்சம் disappointment.என்ன ஒரு ஒன்ற plate இறா மட்டும் சாப்பிட்டேன்.
பின் குறிப்பு:இத எழுதும் போது ஒருத்தன் போட்டான் ஒரு மொக்கை எப்பா .....
அதவும் ஒரு கல்....... ணம் ஆக போற ஒரு பொண்ணோட ராமா ....
1 comment:
enna koduma saravana ...
Post a Comment