Friday, January 29, 2010

கைப்பிள்ளைங்களா...!

எல்லோராலையும் சிரிக்கவே முடியாது அவங்கபோல.எதுக்கெடுத்தாலும் சிரிப்பாங்க . சில நேரம் ஏன் சிரிப்பாங்கனும் தெரியாது.சிரிக்கவே காலேஜ் வந்திருக்காங்க போல. கெக்க புக்கனு சத்தம்  வந்தா அவங்கதான்.கைதட்டிபாங்க. அவங்க gangla   எவனாவது ஒருத்தன் மத்தவன ஒட்டுனா  போதும் சொல்லிவச்ச மாதிரி எல்லோரும் ஒன்னா சிரிப்பாங்க.அவங்க கேங்கே பொண்ணுகளோட கவனத்த ஈர்க்தான்,இந்த கெக்க புக்க எல்லாம் பண்ணுவாங்க.
      
          
           ஏன்டா நண்பா இப்படி சத்தமா சிரிகிறீங்க?
          silenta சிரிச்சா யாருக்கும் கேட்காதுல!
          (கிளாஸ்க்கே  கேட்கனுமாம் )
          என்டா இப்படி தேவை இல்லாம   சிரிகிறீங்க?
           சிரிச்சா ஆயுள் கூடும்!
           ஏன் குரூப்பா  சிரிகிறீங்க?
           சந்தோசத்த  பகிர்ந்துகிறோம்!
           ஏன் பொண்ணுகள concentrate பண்ணி சிரிகிறீங்க?
           கேள்வி தவறு!
           ஏன் மத்தவங்க பீல் பண்ண மாட்டாங்களா?
            மத்தவங்க பீல் பண்ணற அளவுக்கு போகமாட்டோம்!
மணி உன் பேரு வெறும் பாட்டில்லா  இல்ல பீர் பாட்டில்லாங்கிறது புண்படுதாதா! (நானும் பல வாங்கி இருக்கேன்,அத சொல்லி மாளாது)
அவங்க மனசுல நாமதான் இந்த கிளாஸ்ல கெத்து அப்படிங்கற நெனபும்  கொஞ்சம்.
நெஜமாவே அது ஒரு காமடி குரூப் தான்.(ஆமா அந்த சங்கத்துல யாரு தலைவர்,இந்த சங்கத்துக்கு இன்னொரு பேரு கைபிள்ளை சங்கமாம் அப்படியா)

நவீன்னு ஒரு ஜீவன்!எதுக்கும் கவலை படமாட்டானு சொல்றாங்க.கிட்டத்தட்ட அப்படிதான்.இடம் பொருள் ஏவல் இதுவெல்லாம் என்னனே தெரியாது.அவன் ரேர்ரா  எழுதுன ஒரு கவிதை
           பூக்கள் பூப்பது  பெண்கள்
                                     வைப்பதற்காக!
           ஆனால் பெண்ணே
                                      நீ பூத்தது எனக்கு  மட்டும்
          தான் (என்று) நினைத்துகொண்டு
                                     இருந்தேன் !
          ஆனால் உன்னை இன்னொருவன்
                                       பறித்துவிட்டான் !
          இப்போது நான் என்ன
                                       செய்ய?
          தற்கொலை  செய்வதா?
                                         இல்லை
         உயிரோடு இருந்து கொண்டே
                                         இறப்பதா!

இப்பதான் புரியுது.நமக்கும் ஒரு பொண்ணு மாட்ட மாட்டேன்ங்குதுனு அடிக்கடி சொல்லுவான்.
(ஆமா இந்த கவிதை எந்த பா னு எல்லாம் எனக்கு  தெரியாது .அவன்  கிட்ட கேட்டுகோங்க.)

என்னை  போட்டோவுல  பார்த்தா என்னகே பிடிக்க மாட்டேங்குது.அதனால தான் போட்டோ எடுத்துக்க மாட்டேன்ங்றேன் (எவன் மூஞ்சிதான் போட்டோவுல நல்லா தெரியுது).
இது ஒரு அப்பாவி ஜீவன்.
இப்ப நீங்க படிக்கிறது 6 th வெர்சன்.நான் இன்னும்  ரெண்டு வருடம்    கழிச்சு 8 th வெர்சன் உங்கள விட அட்வான்ஸா ஒண்ணா படிப்பேன்  (ஆமா  இன்னும் ரெண்டு வருஷம்  கழிச்சு 10 th வெர்சன் படிக்கிலாமே.அப்படியே 12 th ,13 th னு கடைசி வெர்சன் படிச்சுகிலாம் ..,ஆலபாரு)    


  
        
        
            
 

            
        
      

1 comment:

Anonymous said...

dai ur creation is super da i think u became a poet or pandit da i said about this in my previous msg(archive)nothing else this is good da keepit up...then

Subscribe Now

Add to Google Reader or HomepageAdd to netvibesSubscribe in RojoAdd to My AOL

Add to Excite MIXSubscribe in NewsGator OnlineAdd to PageflakesAdd to fwickiAdd to netomat Hub